ஜியோ 'புத்தாண்டு வாழ்த்துக்கள்' சலுகை: வெறும் 501 ரூபாய்க்கு போன் & ஸ்மார்ட் ஆஃபர்

ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு "புத்தாண்டு வாழ்த்துக்கள்" சலுகை அறிவித்துள்ளது. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2019, 08:30 PM IST
ஜியோ 'புத்தாண்டு வாழ்த்துக்கள்' சலுகை: வெறும் 501 ரூபாய்க்கு போன் & ஸ்மார்ட் ஆஃபர் title=

கடந்த ஒரு வருடமாக தொலை தொடர்பு நிறுவனங்களுக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதிலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பல புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் இருக்கின்றனர். மேலும் பண்டிகை காலங்களில் குறைவான விலையில் பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது Jio நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்திய தொலை தொடர்பு துறையில் ஒரு புரச்சியை ஜியோ ஏற்ப்படுத்தி உள்ளது எனக் கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதிர்ச்சி அளிக்கக்கூடிய பல திட்டங்களை அறிவித்து வரும் ஜியோ, அதன் தொடர்ச்சியாக தற்போது புத்தாண்டிலும் ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு "புத்தாண்டு வாழ்த்துக்கள்" சலுகை அறிவித்துள்ளது. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று 501 ரூபாய்க்கு புதிய ஜியோ தொலைபேசி கிடைக்கும். இந்த புதிய தொலைபேசி உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால், உங்களிடம் உள்ள ஒரு பழைய அம்சமான ஜியோ தொலைபேசி மற்றும் சார்ஜர் கொடுத்தால் தான் புதிய ஜியோ தொலைபேசி கிடைக்கும். 

இரண்டாவதாக, உங்களுக்கு ஒவ்வொரு மாதம் 99 ரூபாய்க்கு உறுதி சீட்டுகள் என மொத்தம் 6 மாதங்களுக்கு வழங்கப்படும். இதன் மொத்த மதிப்பு 594 ரூபாவாகும். 

இதன்மூலம், இந்த திட்டம் உங்களுக்கு ரூ. 1095-க்கு கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்துவிட்டால், ஆறு மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டியதில்லை.

இந்த திட்டம் "ஜியோ மான்சூன் ஆஃபர்" மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், நீங்கள் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று 1095 ரூபாய்க்கு "ஜியோ பெஸ்டிவெல் பரிசு அட்டை" வாங்க வேண்டும். இந்த பரிசு அட்டை செல்போன் கடைகளில் கொடுத்தால் புதிய ஜியோ சிம்கார்டு கிடைக்கும். 6 மாதத்திற்கு இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்படும்.

இந்த திட்டம் ஆண்டு முழுவதும் செல்லும். ஒருமுறை நீங்கள் 1095 ரூபாய்க்கு "ஜியோ பெஸ்டிவெல் பரிசு அட்டை" ஒன்றை வாங்கிவிட்டால், ஒரு வருடத்திற்கு வருகிற எந்த திட்டமோ அல்லது சிறப்பு சலுகையிலோ புதிய தொலைபேசி வாங்கும் போது பயன்படுத்தி கொள்ளலாம். இப்போதே நீங்கள் ஒரு தொலைபேசி வாங்க வேண்டிய அவசியமில்லை. 

Trending News