டீக்கடை போட்ட சாஃப்ட்வேர் இன்ஜினியர் .. காரணம் என்ன தெரியுமா..!!!

நம்மில் பலர் பிடித்த வேலையை செய்யத் தான் விரும்புவோம். ஆனால், நல்ல வேலையில் இருக்கும், அதை உதறி தள்ளி விட்டு  போது பிடித்த வேலையை செய்ய நிச்சயம் மன உறுதி தேவை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2020, 06:46 PM IST
  • தேனீர் விற்பனையாளராக அவர் எடுத்த முடிவை விளக்கும் தகவல்களுடன் அவரது தேநீர் கடை படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
  • இவர் இந்த தேநீர் கடையில், நோய் எதிர்ப்புக்கான டீ, மசாலா டீ என பல வகை டீயை விற்கிறார்.
டீக்கடை போட்ட சாஃப்ட்வேர் இன்ஜினியர் .. காரணம் என்ன தெரியுமா..!!! title=

நம்மில் பலர் பிடித்த வேலையை செய்யத் தான் விரும்புவோம். ஆனால், நல்ல வேலையில் இருக்கும், அதை உதறி தள்ளி விட்டு  போது பிடித்த வேலையை செய்ய நிச்சயம் மன உறுதி தேவை.

ஒரு மனிதன் சமூகம் என்ன நினைக்கும் என கவலைப்படாமல், அதிக சம்பளம் வாங்கும் வேலையை உதறி தள்ளி விட்டு, தன் மன விரும்பியதைச் செய்ய முடிவெடுத்துள்ளார்

இந்த நபர், யார் என அடையாளம் தெரியாத நிலையில், தொழில் ரீதியாக அவர் ஒரு மென்பொருள் பொறியாளராக இருந்ததாகவும், விப்ரோ போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுடன் கடந்த காலத்தில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. வேலை மூலம் அவருக்கு நல்ல ஊதியம் கிடைத்த போதிலும், அவர் வாழ்க்கையில் திருப்தியும் அமைதியும் இல்லை, அதுவே அவர் தனது சொந்தத் தொழிலைத் தொடங்க முடிவு செய்து தேநீர் விற்பனையாளராக மாறினார்.

தேனீர் விற்பனையாளராக அவர் எடுத்த முடிவை விளக்கும் தகவல்களுடன் அவரது தேநீர் கடை  படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அவரது நடமாடும் தேநீர் கடையின் ஒரு பக்க போர்டில், ”நான் விப்ரோ போன்ற பெரிய கம்பெனியில் வேலை பார்த்தவன். நல்ல சம்பளம் என்றாலும் நிம்மதி இல்லை. வேலை பார்க்கும் போது எனது டேபிளில் தினமும் டீ வைக்கப்படும். அந்த டீ என வாழ்க்கையின் திருப்பு முனையாக மாறும் என நினைக்கவில்லை. நான் ஒரு என்ஜினீயர் டீ கடைக்காரர்”, என எழுதப்பட்டுள்ளது.

இவர் இந்த தேநீர் கடையில்,  நோய் எதிர்ப்புக்கான டீ, மசாலா டீ என பல வகை டீயை விற்கிறார். 

ALSO READ | கடன் தவணை சலுகையை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்: SC-யிடம் மத்திய அரசு

Trending News