Tourism: வியட்நாம் சுற்றி பார்த்துவர ரூ.50 ஆயிரம் போதும்

வெளிநாடு சுற்றி பார்க்க உங்களுக்கு ஆசையாக இருந்தால், வெறும் 50 ஆயிரம் ரூபாய் செலவில் வியட்நாமை நீங்கள் சுற்றிப்பார்த்துவிட்டு வரலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 13, 2022, 08:06 AM IST
Tourism: வியட்நாம் சுற்றி பார்த்துவர ரூ.50 ஆயிரம் போதும்  title=

இந்தியாவுக்கு வெளியே வெளி நாடு ஒன்றில் இருக்கும் அழகான இடங்களுக்கு சென்று வர விரும்புகிறீர்களா? அப்படியானால், வியட்நாம் உங்கள் சிறந்த இடமாக இருக்கும். அழகான நிலப்பரப்புகள், அடுக்கடுக்கான மாடிகள், அழகிய கடற்கரைகள் மற்றும் பல சுண்ணாம்புக் குகைகள் என திரும்பிய திசையெல்லாம் சுற்றிப்பார்க்க உகந்த இடங்களாக இருப்பதால், ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் உகந்த மன மகிழ்ச்சியை கொடுக்கும் இடமாக வியட்நாம் இருக்கிறது. வியட்நாம் சுற்றுப் பயணத்தில் அறுசுவை உணவுகளும் உங்களுக்கு கிடைக்கும். இப்படியான அனுபவத்தை நீங்கள் பெற வெறும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் செலவழித்தால் போதும். 

விமான டிக்கெட்டுகள்

விமான டிக்கெட்டுகளுக்கான விமான கட்டணம் ரூ. 17,000 வரை குறைவாக இருக்கும். ஆம், விமான முன்பதிவு இணையதளங்களைச் சரிபார்த்து, சற்று முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்கள் தேதிகளை முடிந்தளவுக்கு 3 மாதங்களுக்கு (தோராயமாக) பிறகு இருக்குமாறு வைத்துக் கொண்டால், விமான டிக்கெட் குறைவாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. 

தங்குமிடம்

நிறைய பட்ஜெட் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. தலைநகர் ஹோ சி மின் நகரில், Suite Backpackers Inn, Eco backpackers hostel போன்ற விடுதிகள் நல்ல சாய்ஸ். நீங்கள் Airbnb-ஐயும் தேர்வு செய்யலாம். ஒரு ஹாஸ்டலில் ஒரு படுக்கை அல்லது Airbnb தங்குமிடம் ஒரு இரவுக்கு ரூ. 1,000க்குக் கீழே கூட கிடைக்கும்.

உணவு 

வியட்நாம் தெரு உணவுக்கு பிரபலமானது. அந்த அனுபவத்தை தவறவிட்டுவிடாதீர்கள். Nem Raan அல்லது Cha Gio (வறுத்த ஸ்பிரிங் ரோல்ஸ்) மற்றும் Cha Ca (வறுக்கப்பட்ட துண்டு துண்தாக வெட்டப்பட்ட மீன்), ஃபோ (குழம்பு நூடுல்ஸ்), Xoi (ஒரு வகையான ஒட்டும் அரிசி) ஆகியவை நீங்கள் முயற்சிக்க வேண்டிய சில சுவையான வியட்நாமிய உணவுகள்.

சுற்றுலாவுக்கான உகந்த நேரம்

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை, ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை (எந்த நேரத்திலும் நீங்கள் பார்வையிடலாம் என்றாலும், தேவையான ஆராய்ச்சி செய்து அதற்கேற்ப துணிகளை பேக் செய்யுங்கள்).

வியட்நாமின் முதல் 6 இடங்கள்

ஹனோய்: வியட்நாமின் தலைநகரில் வியட்நாம் இனவியல் அருங்காட்சியகம் மற்றும் வியட்நாம் நுண்கலை அருங்காட்சியகம் உள்ளது. 

ஹாலோங் விரிகுடா: யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம், இந்த இடம் மயக்கும் கடல் காட்சிகளுக்கு பிரபலமானது.

ஹோ சி மின் நகரம்: வணிக மையம் (முன்னர் சைகோன்) பிரெஞ்சு காலனித்துவ அடையாளங்கள் மற்றும் வியட்நாமிய போர் வரலாற்று அருங்காட்சியகங்கள் மற்றும் Củ Chi சுரங்கங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஹோய் ஆன்: மகிழ்ச்சிகரமான ஜப்பானிய பாலம், அழகான பழைய வணிக வீடுகள் மற்றும் வசீகரமான பழைய நகர பகுதி ஆகியவை இந்த இடத்தின் முக்கிய ஈர்ப்புகளில் சில.

Sa Pa (Sapa): இது வியட்நாமில் ஏராளமான விருப்பங்களைக் கொண்ட சிறந்த மலையேற்ற இடமாகும். கிராமப்புறங்களில் இருக்கும் நெல் வயல்கள் காண வேண்டியவை.

மீகாங் டெல்டா: இது வியட்நாமின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மீகாங் ஆறு இங்கு கடலில் சந்திக்கிறது. நெல் வயல்கள், சதுப்பு நிலங்கள் உள்ளிட்டவை உங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். 

மேலும் படிக்க | Watch Video: கர்தவ்யா பாதையாக மாறும் தில்லி ராஜ பாதை; பிரம்மிக்க வைக்கும் காட்சி!

மேலும் படிக்க | NRI Remittances மற்றும் கிரெடிட் வளர்ச்சியில் அதிகரிப்பை காணும் பெடெரல் வங்கி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News