புதனின் மாற்றத்தால் இந்த ராசிகளின் யோகம் அமோசமாக இருக்கும், வாழ்க்கை பிரகாசிக்கும்

Mercury Transit: புதன் கிரகம் வணிகம், அறிவு மற்றும் பொருளாதாரம் போன்றவற்றுடன் தொடர்புடைய கிரகமாகும். புதனின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 30, 2022, 06:32 PM IST
  • கன்னி ராசியின் ஒன்பதாம் வீட்டில் புதன் நுழையவுள்ளார்.
  • இந்த நேரத்தில் மேஷ ராசிக்கார்ரகள் நல்ல லாபம் பெறலாம்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
புதனின் மாற்றத்தால் இந்த ராசிகளின் யோகம் அமோசமாக இருக்கும், வாழ்க்கை பிரகாசிக்கும் title=

வேத ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் தனது ராசியை மாற்றினாலோ, அல்லது அதன் நிலையை மாற்றினாலோ, அது அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது. புதன் கிரகம் மே 10 முதல் பின்னோக்கி நகர்வில் இருக்கிறார். இப்போது அது ஜூன் 3 ஆம் தேதி அவர் ரிஷப ராசியில் நுழையவுள்ளார்.

புதன் கிரகம் வணிகம், அறிவு மற்றும் பொருளாதாரம் போன்றவற்றுடன் தொடர்புடைய கிரகமாகும். புதனின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். புதனின் ராசி மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என இந்த பதிவில் காணலாம். 

மேஷம்:
உங்கள் ஜாதகத்தில் புதன் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது பணம் மற்றும் பேச்சுக்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது. ஆகையால், இந்த நேரத்தில் மேஷ ராசிக்கார்ரகள் நல்ல லாபம் பெறலாம். 

மேஷ ராசிக்கார்ரகளுக்கு திடீர் பண ஆதாயங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக சிக்கிய பணத்தை இந்த காலத்தில் மீட்டெடுக்கலாம். வியாபாரத்தில் ஒரு பெரிய ஒப்பந்தம் நல்ல படியாக முடியும். உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6 ஆம் வீட்டிற்கு அதிபதி புதன். இந்த நேரத்தில் உங்கள் தைரியமும் வலிமையும் அதிகரிக்கும்.

கன்னி:
கன்னி ராசியின் ஒன்பதாம் வீட்டில் புதன் நுழையவுள்ளார். இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்துக்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது. ஆகையால், இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். 

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை அல்லது வியாபாரம் தொடர்பான பயணங்களை நீங்கள் மேற்கொள்ளலாம். இந்த பயணங்கள் உங்களுக்கு சாதகமான பலன்ககளையும் பண வரவையும் அளிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இது நல்ல நேரம்.

மேலும் படிக்க | புதனின் மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு பிரச்சனை: அதிகபட்ச கவனம் தேவை 

சிம்மம்:

புதன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது வேலை மற்றும் வியாபாரத்தின் ஸ்தானமாக கருதப்படுகின்றது. எனவே இந்த நேரத்தில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் விரிவாக்கம் கூடும். முதலீடு செய்வதற்கு சாதகமான காலமாக இது இருக்கும்.

புதனின் இந்த மாற்றம் பின் வரும் ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்காது. இவர்களது வாழ்வில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

- மிதுனம்
- ரிஷபம்
- விருச்சிகம்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மெலும் படிக்க | செவ்வாயின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் பண மழை பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News