2019ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம், இன்று மற்றும் நாளை காலை வரை நிகழவிருக்கிறது.
இந்த சந்திர கிரகணம், இன்று இரவு 11.41 மணிக்கு தொடங்கி 21ம் தேதி காலை 10.11 மணிவரை நீடிக்கிறது. இந்தியாவில் 62 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த கிரகணத்தை நாம் பார்க்க இயலாது. இந்த சந்திர கிரணத்தை தொடர்ந்து 2021, மே 26 வரை எந்த சந்திர கிரகணமும் நிகழாது என்று கூறப்படுகிறது.
இந்தக் கிரகணத்தின்போது நிலா, புவி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும். இத்தகைய சந்திர கிரகணம் இன்றிரவு தோன்றுகிறது. தென்னமெரிக்காவிலும் வட அமெரிக்காவிலும் முழுச் சந்திர கிரகணம் தென்படும். கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அயர்லாந்து, பிரிட்டன், நார்வே, சுவீடன், போர்ச்சுகல், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் கிரகணம் தென்படும்.