ஜனவரி 1 முதல் மாறும் விதிகள்: 2022 ஆம் ஆண்டு நிறைவுபெற இன்னும் சில நாட்களே உள்ளன. அதன் பிறகு புத்தாண்டு 2023 பிறந்துவிடும். மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். புதிய ஆண்டில் முக்கியமான பல விதிகளில் மாற்றம் ஏற்படும். வங்கி, இன்சூரன்ஸ், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் தொடர்பான இந்த விதிகள் குறித்த தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் இனிவரும் காலங்களில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். புதிய ஆண்டில் முக்கிய விதிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கார்டு விவரங்களை கூகுள் சேவ் செய்யாது
புத்தாண்டு முதல் கார்டு எண் மற்றும் அது தொடர்பான விவரங்களை நினைவில் வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். புத்தாண்டிலிருந்து அதாவது ஜனவரி 1, 2023 முதல், கார்டு எண் மற்றும் காலாவதி தேதி போன்ற விவரங்களை கூகுள் சேவ் செய்து வைக்காது. ஆன்லைனில் கட்டணம் செலுத்தும்போது இவற்றை நீங்கள் கைமுறையாக உள்ளிட வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்துவதை பாதுகாப்பானதாக மாற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
பான் கார்டு மற்றும் ஆதார் கார்டின் இணைப்பு
பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வேலையை நீங்கள் இன்னும் செய்து முடிக்கவில்லை என்றால் உடனடியாக செய்துவிடுங்கள். இருப்பினும் அதை இணைப்பதற்கான வரம்பு ஏப்ரல் 2023 ஆகும். ஆனால் வங்கி தொடர்பான தொல்லைகளைத் தவிர்க்க, இந்த வேலையை விரைவில் முடிப்பது நல்லது.
மேலும் படிக்க | ஜனவரி மாதத்தில் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையா?
மடிக்கணினியில் கூகுள் க்ரோம் வேலை செய்யாது
ஜனவரி 1, 2023 முதல், Windows 7 மற்றும் 8.1க்கான புதிய Chrome பதிப்புகளுக்கான அதிகாரப்பூர்வ ஆதரவு நிறுத்தப்படும். அதாவது, இந்த பதிப்புகளைக் கொண்ட மடிக்கணினிகளில் இனி பயனர்கள் க்ரோம் ப்ரவுசரைப் பயன்படுத்த முடியாது. இந்த அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த ஆதரவு 7 பிப்ரவரி 2022 அன்று மூடப்படும்.
காப்பீட்டு பிரீமியம் கட்ட ஆகும் செலவு அதிகரிக்கலாம்
ஜனவரி 1, 2023 முதல் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துவதற்கு ஆகும் தொகை அதிகரிக்கக்கூடும். ஐஆர்டிஏஐ புதிய விதிகளை பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், வாகன ஓட்டிகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கலாம்.
கிரெடிட் கார்டு விதிகள் மாறும்
நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் நபராக இருந்தால், இது உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும். உங்கள் ரிவார்டு புள்ளிகள் அனைத்தையும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மீட்டுக்கொள்ளுங்கள். இல்லையெனில் அவை காலாவதியாகிவிடும். இது தவிர, எச்டிஎஃப்சி உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகளின் ரிவார்டு பாயிண்ட்கள் தொடர்பான விதிகளும் ஜனவரி 1 முதல் மாறுகின்றன.
உயர் பாதுகாப்பு எண் தகடு பொருத்த வேண்டும்
நீங்கள் உத்தரபிரதேசத்தில் வசிக்கும் நபராக இருந்து இன்னும் இரு அல்லது நான்கு சக்கர வாகனங்களில் ஹை செக்யூரிட்டி ரெஜிஸ்ட்ரேஷன் பிளேட்டை (HSRP) பொருத்தவில்லை என்றால், உடனடியாக இந்த வேலையைச் செய்யுங்கள். காலக்கெடு நீட்டிக்கப்படாவிட்டால், புதிய ஆண்டு முதல் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | ரயிலில் டிக்கெட் செக் செய்யக்கூடாது! இந்த விசேஷ விதிமுறை உங்களுக்கு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ