முடி வளர்ச்சிக்கு நெல்லிக்காய்: முடி பிரச்சனையால் பலர் சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் முடி உதிர ஆரம்பித்து, சில சமயம் நேரத்துக்கு முன்பே நரைத்துவிடும். முடி அதிகமாக மெல்லியதாக மாறுவது மற்றும் சேதமடைவது மற்றும் கரடுமுரடானதாக மாறுவது ஆகியவை முடியின் சில பிரச்சனைகளாகும். அத்தகைய சூழ்நிலையில், சில எளிய வீட்டு வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வரிசையில் நெல்லிக்காயை முடி வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம். ஏனெனில் நெல்லிக்காவில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகின்றன. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது, இது முடி உதிர்வை குறைக்கிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இதில் காணப்படுகின்றன. இத்தகைய நன்மைகளை கொண்டுள்ள நெல்லிக்காயில் என்ன கலந்து தடவினால் முடியில் தடவினால் முடி வளர ஆரம்பிக்கும் என்பதை இப்போது இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இந்த தீர்வை முயற்சிக்க சரியான வழியையும் தெரிந்து கொள்ளுங்கள்.
முடி வளர்ச்சிக்கு நெல்லிக்காய் | Amla For Hair Growth:
நெல்லிக்காயை முடி வளர்ச்சிக்கு (Hair Growth) பல வழிகளில் பயன்படுத்தலாம். நெல்லிக்காயில் தேங்காய் எண்ணெய் கலந்து கூந்தலுக்கு இயற்கையான நெல்லிக்காய் எண்ணெய் தயாரிக்கலாம். இந்த எண்ணெயை கூந்தலில் தடவினால், முடிக்கு போஷாக்கு கிடைத்து, முடி நீளமாக வளர ஆரம்பிக்கும். இந்த எண்ணெய் தயாரிக்க, தேங்காய் எண்ணெய் மற்றும் ஃபிரெஷ் நெல்லிக்காய் தேவைப்படும்.
மேலும் படிக்க | கொல்ஸ்ட்ரால் முதல் உடல் பருமன் வரை... அளவிற்கு அதிக முட்டை பேராபத்து!
இதற்கு முதலில் இரண்டு நெல்லிக்காய் எடுத்து ஒரு grater உதவியுடன் நன்கு துருவிக்கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை எடுத்து சூடாக்கவும். இந்த எண்ணெயைக் கொதிக்கவைத்து, அதில் துருவிய நெல்லிக்காயைச் சேர்க்கவும். இந்த எண்ணெயை மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை காய்ச்சி வடிகட்டி, தனியாக வைக்கவும். உங்கள் நெல்லிக்காய் எண்ணெய் தயார்.
முடியைக் கழுவுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் நெல்லிக்காய் எண்ணெயை முடியில் தடவலாம். இதற்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட நெல்லிக்காய் எண்ணெயை உங்கள் உள்ளங்கையில் எடுத்து, வேர் முதல் நுனி வரை தலையில் தடவி, உங்கள் விரல்களால் தலையை நன்கு மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் கழித்து உங்கள் தலைமுடியைக் கழுவினால், உங்கள் தலைமுடி மென்மையாகத் தோன்றும். நீங்கள் விரும்பினால், உங்கள் தலைமுடியில் இரவு முழுவதும் எண்ணெயை ஊற வைத்திருக்கலாம். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இந்த எண்ணெயைக் கொண்டு முடியை மசாஜ் செய்வதன் மூலம் முடி நீளமாக வளர ஆரம்பித்து அடர்த்தியாகவும் மாறும்.
இயற்கையான முறையில் முடியை கருமையாக்க நெல்லிக்காய்:
இந்த எண்ணெயை தயாரிக்க, முதலில் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை எடுத்து சூடாக்கவும். அதன் பிறகு, கறிவேப்பிலை, நெல்லிக்காய் தூள் சேர்த்து சூடாக வைக்கவும். 5 நிமிடம் சூடு செய்த பிறகு, இந்த எண்ணெயை 12 முதல் 24 மணி நேரம் வரை வைத்திருக்கவும். அதன் பிறகு, எண்ணெயை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும். இந்த எண்ணெயை முடியின் வேர் முதல் நுனி வரை நன்கு தடவி மசாஜ் செய்யவும். நீங்கள் விரும்பினால், அதை 1-2 மணி நேரம் முடியில் தடவி பின்னர் ஷாம்பு செய்யலாம். அல்லது இந்த எண்ணெயை இரவு முழுவதும் தடவி விட்டு, காலையில் உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு செய்யலாம்.
மேலும் படிக்க | நீரிழிவை ஒழித்துக் கட்டும் ‘இன்சுலின் செடி’இலை! பயன்படுத்துவது எப்படி!
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ