போட்டியின் மத்தியில் அழும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த கைப்பந்து வீராங்கனை!

மிசோரம் கைப்பந்து வீராங்கனை அழுத குழந்தைக்கு விளையாட்டு போட்டிக்கு மத்தியில் தாய்ப்பால் கொடுத்த கைப்பந்து வீராங்கனை!!

Last Updated : Dec 12, 2019, 01:51 PM IST
போட்டியின் மத்தியில் அழும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த கைப்பந்து வீராங்கனை! title=

மிசோரம் கைப்பந்து வீராங்கனை அழுத குழந்தைக்கு விளையாட்டு போட்டிக்கு மத்தியில் தாய்ப்பால் கொடுத்த கைப்பந்து வீராங்கனை!!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், மிசோரம் கைப்பந்து வீராங்கனை அழுத குழந்தைக்கு விளையாட்டு போட்டிக்கு மத்தியில் தாய்ப்பால் கொடுத்த கைப்பந்து வீராங்கனையின் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவற்க்கு சுற்றியுள்ள களங்கத்தை உடைத்து, பல பெண்கள் தாய்ப்பால் கொடுப்பது வாழ்க்கையின் ஒரு அழகான தருணம் என்பதை நிரூபித்துள்ளனர். பாராளுமன்றத்தில் ஆஸ்திரேலிய எம்.பி. தாய்ப்பால் கொடுப்பதில் இருந்து, மிசோரமில் உள்ள ஒரு கைப்பந்து வீரரின் படம் வரை ஒரு விளையாட்டுக்கு இடையில் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

அந்த புகைப்படத்தில், ஒரு விளையாட்டு வீராங்கனை தனது கைக் குழந்தைக்கு விளையாட்டு மைதானத்தில் தாய்ப்பால் கொடுப்பதை காணலாம். இந்த படத்தை ஃபேஸ்புக்கில் நிங்லூன் ஹங்கால் பகிர்ந்துள்ளார், அவர் அசல் ஆதாரங்களில் வரவுகளில் லிண்டா சாக்ஹுக் என்றும் எழுதினார்.

கைப்பந்து வீரரின் பெயர் லால்வென்ட்லுவாங்கி என்றும், அவர் துயுகம் கைப்பந்து அணியைச் சேர்ந்தவர் என்றும் அறியப்பட்டுள்ளது. அவர் தனது ஏழு மாத குழந்தையுடன் வீரர்களின் முகாமில் தன்னை சேர்த்துக் கொண்டார். ஒரு விளையாட்டு போட்டிக்கு இடையில், லால்வென்ட்லுவாங்கி தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க ஒரு குறுகிய இடைவெளி எடுத்துக்கொண்டார். யாரோ ஒருவர் படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் ஒரு நீண்ட மற்றும் எழுச்சியூட்டும் செய்தியுடன் பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படம் வைரலானதுடன். இவருக்கு பயனர்கள் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்‌றனர்.  

 

Trending News