உலர் திராட்சை நீர்: இது, அது, எதுவானாலும் அனைத்துக்கும் நிவாரணம் அளிக்கும் அசத்தல் பானம்

Health Benefits of Raisin Water: உலர் திராட்சை ஒரு சிறந்த உலர் பழமாகும். இதில், பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளன. உலர் திராட்சை நீர் பல வழிகளில் நமக்கு உதவுகின்றது.

Health Benefits of Raisin Water: உலர்திராட்சை தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்தில் பல அதிசயங்களைச் செய்யும் என்று சுகாதார நுபுணர்கள் கூறுகிறார்கள். இது ஒரு சூப்பர்ஃபுட்டாக கருதப்படுகின்றது. இதில் இயற்கையான சர்க்கரை, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உலர் திராட்சை தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி இங்கே காணலாம். 

1 /8

உலர் திராட்சை நீர்: உலர் திராட்சை நீரில் சத்துக்களுக்கு பஞ்சமில்லை. இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் தாமிரம் ஆகியவை இதில் நிறைந்துள்ளன. இது மன ஆரோக்கியத்திற்கும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இதன் பல்வேறு பயன்களை இங்கே காணலாம்.

2 /8

எடை இழப்பு: உலர் திராட்சை தண்ணீரில் இயற்கையான சர்க்கரை குறைந்த அளவிலேயே உள்ளது. இதில் உள்ள பண்புகள் இதை எடை இழப்புக்கான சிறந்த தேர்வாக்குகின்றன. இது வயிற்றுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. 

3 /8

 நச்சு நீக்கம்: உடலில் நச்சுப் பொருட்கள் அதிகமாக சேரும்போது பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. தொடர்ந்து உலர் திராட்சை தண்ணீர் குடிப்பவர்களின் உடலில் உள்ள நச்சுக்கள் அவ்வப்போது வெளியேறும். மேலும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உலர் திராட்சை நீர் உதவுகிறது.

4 /8

குடல் ஆரோக்கியம்: உலர் திராட்சை நீர் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

5 /8

ஆற்றல்: உலர் திராட்சையில் இயற்கையான சர்க்கரை உள்ளது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது. இது நாள் முழுவதும் நம்மை உற்சாகமாகவும் ஆற்றலுடனும் வைக்கிறது.   

6 /8

நோய் எதிர்ப்பு சக்தி: உலர் திராட்சை தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த நீர் வைரஸ் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இதன் காரணமாக நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன.

7 /8

கவனம் தேவை: உலர் திராட்சையை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. இதில் இயற்கை சர்க்கரையுடன் அதிக அளவு கலோரிகள் உள்ளன. அதிக அளவு திராட்சை தண்ணீர் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கலாம். இதன் கிளைசெமிக் குறியீடும் அதிகம். ஆகையால் நீரிழிவு நோயாளிகள் இதை கவனமாக உட்கொள்ள வேண்டும். 

8 /8

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.