மும்பை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி ஒரு நாளில் 974 விமானங்கள் இயக்கப்பட்டன. இதுவே சாதனையாக கருதப்பட்டது.
இந்நிலையில் இந்த சாதனையை தற்போது மும்பை விமான நிலையம் முறியடித்து கடந்த மாதம் 20-ம் தேதி 24 மணி நேரத்தில் 980 விமானகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் தனது சொந்த சாதனையை மும்பை விமான நிலையம் முறியடித்து.
இங்கிலாந்தில் உள்ள கேட்விக் ஒற்றை ஓடுபாதை விமான நிலையமும் கோடைக் காலத்தில் நாள் ஒன்றுக்கு 870 விமானங்களை இயக்குகிறது. இவ்விமான நிலையம் ஒரு மணி நேரத்தில் 55 விமானங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. மும்பை விமான நிலையம் ஒரு மணி நேரத்தில் 52 விமானங்களை இயக்கியுள்ளது. ஆசிய அளவில் பிசியான விமான நிலையல பட்டியலில் மும்பை 14-வது இடத்தில் உள்ளது.