222 Rule To Have A Happy Love Marriage Life : தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு உறவில் அதிலும், காதல் அல்லது திருமண உறவில் மகிழ்ச்சியாக இருப்பது என்பது முடியாத காரியமாக மாறி வருகிறது. அந்த உறவு மகிழ்ச்சியாக ஆரம்பித்தாலும், நாட்கள் செல்ல செல்ல கொஞ்சம் தொய்வடைய ஆரம்பித்து விடும். இதை தவிர்க்க, 2-2-2 விதியை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
2-2-2 விதி என்றால் என்ன?
2-2-2 விதி என்றால், 2 வாரத்திற்கு ஒரு முறை ஒரு டேட்டிற்கு செல்வது, 2 மாதத்திற்கு ஒரு முறை விடுமுறையை ஒன்றாக கழிப்பது, 2 வருடத்திற்கு ஒரு முறை வெக்கேஷன் செல்வது என்பதுதான். இதை செயல்படுத்துவது எப்படி?
2 வாரத்திற்கு ஒரு முறை டேட்டிங்:
தினசரி நடவடிக்கைகளில் இருந்தும், உங்கள் அலுப்பான வேலைகளில் இருந்தும் மாறுதலுக்காக இரண்டு வாரத்திற்கு ஒரு முறை டேட்டிங் செல்ல வேண்டும். இது, பிற விஷயங்கள் மீதிருக்கும் உங்களது கவனத்தை, உறவின் மிது காட்ட உதவும். இந்த டேட்டிங்கின் போது டின்னர் செல்லலாம், ஒரு படத்தை பார்க்கலாம், பார்க்கில் கைக்கோர்த்து நடந்து செல்லலாம்.
2 மாதத்திற்கு ஒரு முறை விடுமுறை:
உங்கள் பொறுப்புகளில் இருந்து விடுப்பு எடுத்து, 2 மாதத்திற்கு ஒரு முறை சிறிதளவு தூரமாக பயணித்து ஒரு நாள் ஒன்றாக இருக்க வேண்டும். இது, உங்களுக்கு உங்களுடைய தினசரி வாழ்வில் இருந்து பிரேக் எடுக்க உதவும்.
2 வருடத்திற்கு ஒருமுறை வெக்கேஷன்:
இரண்டு வருடத்திற்கு ஒரு முறை, இருவரும் 10 நாட்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு வெக்கேஷன் செல்ல வேண்டும். இது உங்களுக்கு உங்கள் உறவை இளமை உணர்வுடனும் பல அனுபவங்களுடனும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும். உங்கள் உறவை இன்னும் ஆழமாக்க, இது உதவும்.
ஒன்றாக இருப்பதன் அவசியம்:
வலுவான உறவுகள் கூட, பல சமயங்களில் கொஞ்சம் ஆட்டம் காண செய்யும். காரணம், ஆரம்பத்தில் எந்த உறவுக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவம் அப்படியே நிலைப்பதில்லை. காரணம், நமது கவனம் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வெவ்வேறு இடங்களுக்கு சிதற ஆரம்பித்து விடுகிறது. எனவே, அப்படி குறையும் போதெல்லாம் உங்கள் துணையுடன் ஒன்றாக நேரம் செலவிடுவது அவசியம் ஆகும். இப்படி ஒன்றாக இருக்கும் போது, புதிய அனுபவங்களை ஏற்படுத்திக்கொள்வதுடன் அந்த உறவிற்குள் எப்போதும் இளமையான உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
டேட்டிங் ஐடியாக்கள்:
டின்னர்:
இருவரும் ஒன்றாக சமையல் செய்து சாப்பிடலாம், அல்லது வெளியில் டின்னருக்கு செல்லலாம்.
கேம் விளையாடுவது:
போர்ட் கேம், கார்ட் கேம் அல்லது VR கேம் ஆகியவற்றை விளையாடலாம்.
படம் பார்ப்பது:
இருவரும் உங்களுக்கு பிடித்த படத்தை வீட்டிலேயே பார்க்கலாம். அல்லது, புதிதாக வெளியாகியிருக்கும் படத்திற்கு சென்று பார்க்கலாம்.
விடுமுறையை கழிக்க ஐடியாக்கள்:
ரோட் ட்ரிப்:
நகரத்திற்குள்ளேயே கார் அல்லது பைக்கில் நெடுந்தூர பயணம் மேற்கொள்ளலாம்.
கேம்பிங்:
இரண்டு நாட்களுக்கு மலைப்பாங்கான இடத்திற்கு சென்று, கேம்பிங் செய்யலாம்.
ஸ்பா:
கப்புள் மசாஜ்கள் அல்லது ஸ்பா செண்டர்களுக்கு சென்று நேரம் உடலையும், மனதையும், உறவையும் ரிலாக்ஸ் ஆக்கலாம்.
வெக்கேஷன் ஐடியாக்கள்:
வெக்கேஷன் என்பது 10 அல்லது அதற்கு மேற்பட்ட நாளாக இருக்க வேண்டும்.
வெளிநாட்டு பயணம்:
விடுமுறை எடுத்துக்கொண்டு, பட்ஜெட்டிற்குள் வந்தால் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளலாம். அப்படி வெளிநாட்டிற்கு செல்ல முடியவில்லை என்றால் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை தேர்ந்தெடுத்து அங்கு வெக்கேஷனுக்கு செல்லலாம்.
க்ரூஸ்:
சொகுசு கப்பலில் நெடுநாட்கள் கடலில் பயணம் செய்வது பலருக்கு பிடித்த அனுபவமாக இருக்கும். அதையும் தம்பதிகள் செய்யலாம்.