அப்பார்ட்மெண்டிற்கு இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வரக்கூடாது!!

இரவு 8 மணிக்கு மேல் பெண் நண்பர்கள் இங்கு வரக்கூடாது; புனே அப்பார்ட்மெண்டின் புதிய சட்டம்!!

Updated: Apr 28, 2019, 08:04 PM IST
அப்பார்ட்மெண்டிற்கு இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வரக்கூடாது!!

இரவு 8 மணிக்கு மேல் பெண் நண்பர்கள் இங்கு வரக்கூடாது; புனே அப்பார்ட்மெண்டின் புதிய சட்டம்!!

இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில், ஒரு அப்பார்ட்மெண்ட்டில் ஒரே பாலினத்தை சேர்ந்த விருந்தினர் வருவதற்கு இரவு 10 வரை மட்டுமே அவகாசம், எதிர்பாலினத்தவர் வருவதற்கு இரவு 8 மணி வரை மட்டுமே அவகாசம் என்ற விதியை வகுத்துள்ளனர் இது வைரலாகி வருகிறது.

அந்த அப்பார்ட்மெண்ட்டில் குடியிருப்பவர்கள் பெண்களிடம் பேசக்கூடாது, பெண்கள் இருக்கும் பக்கமே திரும்பி பார்க்ககூடாது இது போன்ற விதிகள் நீங்கள் படித்த பள்ளியில் கல்லூரியில் இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் வளர்ந்து வேலைக்கு சென்று அதன் பின் வசிக்கும் வீட்டில் இது போன்ற விதிகள் இருந்தால்?. எப்படி இருக்கும். பைத்தியம் பிடிப்பது போன்று ஆகி இருக்கும் அல்லவா.... 

ஆம் புனேவை சேர்ந்த ஒரு அப்பார்ட்மெண்ட்டில் இது போன்ற சில விதிகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி: "நீங்கள் வசிக்கும் வீட்டிற்கு ஒரே பாலினத்தை சேர்ந்த விருந்தினர் வருவதற்கு இரவு 10 வரை மட்டுமே அவகாசம், எதிர்பாலினத்தவர் வருவதற்கு இரவு 8 மணி வரை மட்டுமே அவகாசம், விருந்தினர் இரவு தங்குவதாக இருந்தால் நீங்கள் வீட்டின் ஒனரிடம் முன்னதாக அனுமதி பெற வேண்டும். 4-5 நாட்களுக்கு மேல் தங்குவதாக இருந்தால் போலீஸ் சான்றிதழ் முக்கியம் " உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. 

அந்த விதிமுறைகள் அடங்கிய புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பதிவுகளின் சிலவற்றை கீழே இணைத்துள்ளோம்.