Rasipalan 03 அக்டோபர் 2021: இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி இருக்கும்

இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 3, 2021, 06:05 AM IST
Rasipalan 03 அக்டோபர் 2021: இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி இருக்கும் title=

மேஷம்
இன்று கலைஞர்களுக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக அமையும். எதிலும் சற்று கவனமுடன் நடந்துகொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்
இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் வெகுசிறப்பாக இருக்கும். இதுவரை இருந்துவந்த உடல்நலக் கோளாறுகள் யாவும் படிப்படியாக விலகும். மனைவி, பிள்ளைகளும் சுபிட்சமாக அமைவதால் மருத்துவச் செலவுகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்
இன்று எல்லாப் பணிகளிலும் புதுத்தெம்புடனும், பொலிவுடனும் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பயணங்களும் அதன்மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். மனதில் உற்சாகம் பிறக்கும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கடகம்
இன்று குடும்ப வாழ்வில் குதூகலமும் பூரிப்பும் உண்டாகும். கடந்தகால சோதனைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொருளாதாரநிலையும் மிகச்சிறப்பாக அமைவதால் பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். 
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்
இன்று வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி நட்பு மலரும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சி அதிகரிக்கும். 
அதிர்ஷ்டநிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கன்னி
இன்று கொடுக்கல்-வாங்கல் சுமூகமாக நடைபெறும். கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எதிர்பார்க்கும் லாபத்தை அடையமுடியும். கொடுக்கல்-வாங்கலிலும் சரளமான நிலை ஏற்பட்டு தாராளமான பணவரவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

துலாம்
இன்று உங்களுக்கிருந்த வம்பு வழக்குகள் விலகி சாதகப்பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் தக்க சமயத்தில் உதவிகரமாக இருக்கும். தொழில், வியாபாரம்  அபிவிருத்தி அடையும். கேட்ட இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்
இன்று தொழில், வியாபாரத்தில் இதுநாள்வரை நிலவிய நலிவுகள் மறைந்து ஏற்றமான பலனை ஏற்படுத்தும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டி பொறாமைகளும் விலகும். கூட்டுத்தொழிலிலும் கூட்டாளிகளின் ஒற்று மையான செயல்பாட்டால் பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

தனுசு
இன்று வேலையாட்களாலும் பணவரவுகளும் ஆர்டர் களும் குவியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளும் எதிர் பாராத ஏற்றத்தை ஏற்படுத்தும். புதிய கிளைகளை நிறுவும் நோக்கம் நிறைவேறும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

மகரம்
இன்று உத்தியோகம் நல்லபடியாக இருக்கும். சிலருக்கு ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உடன் பிறந்தோர் உறு துணையாக இருப்பர். எளிதில் கோபப்படக்கூடிய நபர்கள் யாரிடமும் கவனமாக பேசுவது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கும்பம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புக்களும் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். 
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:  3, 6, 9

மீனம்
இன்று வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களும்  படிப்பிற்கேற்ப சிறப்பான வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பெண்கள் மனதுக்கு சந்தோசப் படக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News