சீரடி சாயி பாபா ஆலயத்திற்கு 11 நாட்களில் 14.54 கோடி ரூபாய் நன்கொடை

சீரடி சாய் பாபா கோயில் கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி முதல் புதிய ஆண்டின் முதல் நாள் என மொத்தம் 11 நாட்களுக்குள் 14.54 கோடி ரூபாய் நன்கொடையாக வந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2019, 01:44 PM IST
சீரடி சாயி பாபா ஆலயத்திற்கு 11 நாட்களில் 14.54 கோடி ரூபாய் நன்கொடை title=

இந்த காலக்கட்டத்தில் 9.5 லட்சம் பக்தர்கள் சீரடி சாய் பாபாவை தரிசனம் செய்வதற்காக வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள், கிறிஸ்துமஸ் மற்றும் வருடப்பிறப்பு என தொடர்ந்து விடுமுறை இருந்ததால் வழக்கமான எண்ணிக்கையை விட அதிகமாக மக்கள் தரிசனம் செய்ய வந்துள்ளனர். 

ஜீ நியூஸ் ஆசிரியர் பிரசாந்த் சர்மாவின் தகவல் படி பணம், டிடி, டெபிட் கார்டுகள், காசோலைகள், வெளிநாட்டு நாணயங்கள், தங்கம் மற்றும் வெள்ளி என நன்கொடைகளாக வழங்கப்பட்டன.

மொத்தம் 14.54 கோடி ரூபாயில் 30 லட்சம் ரூபாய் 18 வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளாக வந்துள்ளது. இந்த காலகட்டத்தில் கோவிலில் நன்கொடை பெட்டிகள் மூலம் பெறப்பட்ட பணம் மட்டும் ரூ. 8.5 கோடியாகவும், நன்கொடை கவுண்டர்களில் பெறப்பட்டது ரூ 3 கோடி ஆகும். டிடி மூலம் 3 கோடி ரூபாய் பெறப்பட்டது. பல பக்தர்கள் பற்று அட்டைகள் மற்றும் காசோலைகளைப் பயன்படுத்தி நன்கொடைகள் அளித்தனர்.

இந்த நன்கொடையில் பணத்தை தவிர, 507 கிராம் தங்கம் மற்றும் 16.5 கிலோ வெள்ளி ஆகியவை கோவிலுக்கு பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டன. நன்கொடையாக பெறப்பட்ட பணத்தை கணக்கிடும் பணி புதன்கிழமை (ஜனவரி 2) தொடங்கியது.

Trending News