கர்நாடக மீனவருக்கு கிடைத்த 250 கிலோ அபூர்வ ரக ராட்சத மீன்!

கர்நாடக மாநிலம் மல்பே மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 250 கிலோ எடைகொண்ட ராட்சத மீன் ஒன்றை மீனவர்கள் பிடித்து கரைக்குக்கொண்டு வந்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 12, 2022, 06:01 PM IST
  • 250 கிலோ எடையில் ராட்சத மீன்
  • மங்களூரூவில் ஏலத்துக்கு விடப்பட்டது
கர்நாடக மீனவருக்கு கிடைத்த 250 கிலோ அபூர்வ ரக ராட்சத மீன்! title=

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மல்பே மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடல் கேப்டன் என்ற மீன்பிடி படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் அரபிக் கடல் பகுதியில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர்கள் வீசிய வலையில் இராட்சதவகை அபூர்வரக  மீன் ஒன்று சிக்கியது. 

பின்னர் மல்பே மீன்பிடித் துறைமுகத்துக்கு திரும்பிய மீனவர்கள் கரைக்கு வந்தபின்னர் வலையிலிருக்கும் மீனை கண்டு ஆச்சரியமுற்றனர். அந்த மீனானது, ராட்சத மீன்போன்று சுமார் 250 கிலோ எடைக்கொண்டதாக இருந்தது. இந்த மீன் கரகசா மீன் மற்றும் சா மீன்(Saw Fish) என்று அழைக்கப்படுகிறது. 

Saw Fish - National life federation

மேலும் படிக்க | காதலன் கண்முன்னே காதலிக்கு பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது

இந்த ரக மீன்கள் தென்மேற்கு பசிபிக் பெருங்கடல், கிழக்கு இந்திய பெருங்கடல், டாஸ்மானியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கடல்பகுதிகளில் காணப்படுகிறது.

 

 

இந்த மீனின் அமைப்பு 10 அடி நீளம் உள்ள வாயில் பற்கள் வெளியே தெரிவது போன்று இருந்தது. இந்த அதிசய மீனை பிடித்து வந்த மீனவர்கள், மல்பே மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மங்களூரு மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு சென்று ஏலம் விட்டு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் படிக்க | திமுக தலைமை தொடர்ந்து டார்சர் செய்தால் "தற்கொலை" செய்துகொள்வேன் -எச்சரித்த நிர்வாகி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News