Central Government Pensioners: மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு இது முக்கியமான நேரம். மாத ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற இந்த மாத இறுதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது மிக அவசியமாகும்.
Life Certificate: 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 முதல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி வழங்கப்படுகிறது. 80 வயதுக்குட்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு, இந்த வசதி நவம்பர் 1 முதல் தொடங்குகிறது. ஓய்வூதியம் பெறுவோர் மாதா மாதம் தவறாமல் ஓய்வூதியம் பெற, ஆண்டுக்கு ஒருமுறை வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க மத்திய அரசு அளித்துள்ள புதிய வசதிகள் பற்றி இங்கே காணலாம்.
ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய தகவல். சரியான நேரத்தில் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். நவம்பர் 30 காலக்கெடுவிற்குள் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், டிசம்பர் மாதம் முதல் ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்படும்.
மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு இது முக்கியமான நேரம். மாத ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற இந்த மாத இறுதிக்குள் இதை சமர்ப்பிப்பது மிக அவசியமாகும். இது குறித்த சில முக்கியமான அம்சங்களை இங்கே காணலாம்.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான செயல்முறையை எளிமைப்படுத்தவும் பாதுகாப்பான முறையில் ஓய்வூதியத்தை பெறவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுள் சான்றிதழ் குறித்த முழுமையான புரிதல் இருப்பது அவசியமாகும்.
80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 முதல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி வழங்கப்படுகிறது. 80 வயதுக்குட்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு, இந்த வசதி நவம்பர் 1 முதல் தொடங்குகிறது. ஓய்வூதியம் பெறுவோர் மாதா மாதம் தவறாமல் ஓய்வூதியம் பெற, ஆண்டுக்கு ஒருமுறை வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க மத்திய அரசு அளித்துள்ள புதிய வசதிகள் பற்றி இங்கே காணலாம்.
இப்போது, முக அங்கீகார அமைப்பு (Face Authentication) மூலம் இந்த வேலையை வீட்டில் இருந்தபடியே எளிதாக செய்யலாம். நோய்வாய்ப்பட்டு வங்கிக்கு செல்ல முடியாத ஓய்வூதியதாரர்களுக்கு, வங்கி ஊழியர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்ப அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் எங்கும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில், இந்த ஊழியர்கள் வீட்டிற்கே வந்து வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கும் செயல்முறையை செய்து முடிக்க உதவி செய்வார்கள்.
மத்திய அரசாங்கம் UIDAI உடன் இணைந்து முக அங்கீகார தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் அனைத்து விதமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் மூலமாகவும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இதற்கு "ஜீவன் பிரமான் செயலி" (Jeevan Praman App) மற்றும் பிற டிஜிட்டல் வழிகளைப் பயன்படுத்தலாம்.
எனினும், ஆயுள் சான்றிதழ் குறித்த பல வித மோசடிகளும் நடந்து வருகின்றன. சைபர் குற்றவாளிகள் ஓய்வூதியதாரர்களை அழைத்து வாழ்க்கைச் சான்றிதழை புதுப்பிப்பதாக கூறி ஏமாற்றி வருகின்றனர். PPO எண், ஆதார் அட்டை எண், மாதாந்திர ஓய்வூதியத் தொகை மற்றும் நாமினியாக பரிந்துரைக்கப்பட்டவர்களின் தகவல் போன்ற ஓய்வூதியதாரர்களின் முழுமையான தரவுகளை அவர்கள் பெற்று விடுகிறார்கள். அதன் பின் இந்த குற்றவாளிகள் ஓய்வூதியம் பெறுவோரை தொலைபேசியில் OTP ஐப் பகிர்ந்து கொள்ளச் சொல்கிறார்கள்.
ஓய்வூதியதாரர் OTP-ஐப் பகிர்ந்து கொண்டவுடன், குற்றவாளிகள் அவர்களது வங்கிக் கணக்கை அணுகி, முழு கணக்குத் தொகையையும் போலி கணக்குகளுக்கு மாற்றிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட சைபர் குற்றவாளிகளிடம் ஓய்வூதியதாரர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஓய்வூதிய இயக்குநரகம் தொலைபேசி மூலம் வாழ்க்கைச் சான்றிதழைப் புதுப்பிப்பது பற்றி எப்போதும் தொடர்புகொள்வதில்லை என்பதை ஒய்வூதியம் பெறுவோர் நினைவில் கொள்ளவேண்டும்.
ஓய்வூதியதார்ரகள் சில முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மிக அவசியமாகும். அறியப்படாத நபர்களிடமிருந்து அழைப்புகள் வந்தால், உங்கள் தனிப்பட்ட தகவல் அல்லது OTP ஐப் பகிர வேண்டாம். ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் அல்லது வங்கியை மட்டுமே பயன்படுத்தவும். ஓய்வூதிய இயக்குநரகம் தொடர்பான அனைத்து தகவல்களுக்கும், அரசாங்க இணையதளத்தை மட்டுமே பார்வையிடவும்.
ஓய்வூதியதாரர்கள் நலனுக்காக, நவம்பர் 2023 இல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பிற ஓய்வூதியர்களின் அமைப்புகளுடன் இணைந்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை 48 நகரங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. இந்த பிரச்சாரத்தின் கீழ், 70.8 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களில் சுமார் 55 லட்சம் பேர் டிஜிட்டல் லைஃப் சான்றிதழை வெற்றிகரமாக பயன்படுத்தினர்.