அட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். இந்த ஆண்டு ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை இந்த புனித நாள் குறிக்கப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் கிரிகோரியன் காலண்டரின் படி தேதிகள் மாறுபடும்.
இந்த நாளில் தங்கத்தை வாங்குவது புனிதமானது என்றும், அந்த நாள் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருகிறது என்றும் பரவலாக நம்பப்படுகிறது. மேலும், மக்கள் முதலீடுகளைச் செய்கிறார்கள், இந்த நாளில் திருமணம் செய்யத் தேர்வு செய்கிறார்கள், புதிய சொத்தை வாங்குகிறார்கள், ஏனெனில் அட்சய திருதியை அனைத்து நல்ல செயல்களுக்கும் சரியான தேதி.
இந்து இதிகாசப்படி, அட்சய திருதியை நாளன்றே வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார். இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார்.
அட்சய திருதியை அன்று அன்னதானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புகள் தானம் செய்தால் திருமணத்தடை நீங்கும், தானியங்களை தானம் செய்தால் விபத்துகளிலிருந்து காப்பாற்றும், கால்நடைகளுக்கு உணவளித்தால் வாழ்வு வளம்பெறும். படிக்க வசதியின்றி தவிக்கும் மாணவர்களுக்கு உதவலாம். ஆதரவின்றி தவிக்கும் முதியோருக்கு உதவலாம்.
அட்சய திருதியை பூஜை நேரம்:
திரிதியை திதி - ஏப்ரல் 25 அன்று இரவு 11:51 மணியிலிருந்து தொடங்குகிறது
திரிதியை திதி - ஏப்ரல் 26 அன்று பிற்பகல் 1:22 மணிக்கு முடிவடைகிறது
அட்சய திருதியை தங்க கொள்முதல் 2020 ஏப்ரல் 25 சனிக்கிழமை
அட்சய திருதியை தங்க கொள்முதல் நேரம் - ஏப்ரல் 26 காலை 11:51 முதல் 5:45 வரை
அட்சய திருதியை தங்க கொள்முதல் 2020 ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை
அட்சய திருதியை தங்க கொள்முதல் நேரம் - காலை 5:45 மணி முதல் மதியம் 1:22 மணி வரை
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, கடைகள் மூடப்பட்டுள்ளன, கோயில்களும் மூடப்பட்டுள்ளன. எனவே, பக்தர்கள் வீட்டில் சடங்குகளைச் செய்ய வேண்டியிருக்கும். தங்கத்தை வாங்க விரும்பும் நபர்கள் Paytm மற்றும் பிற இணையதளங்கள் வழியாக ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யலாம் அல்லது பின்னர் பொருட்களை வாங்கலாம்.