உறக்கத்திற்கு ஊதியம்: 100 நாட்கள், 9 மணி நேரம், 1 லட்சம் ரூபாய் – தூங்க தயாரா?

உறக்கம் என்ற ஒரு இன்றியமையாத விஷயம் இந்நாட்களில் காணக்கிடைக்காத விஷயமாகி வருகிறது. நவீன வாழ்க்கை முறை, மாறிவிட்ட பழக்கங்கள், உணவு முறைகள் என இதற்கு பல காரணங்கள் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2020, 12:50 PM IST
  • 100 நாட்களுக்கு 9 மணிநேர தூக்கத்திற்கு 1 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் – WakeFit.
  • தூங்குவதே தங்களது முன்னுரிமை என்று இன்டர்ன்கள் முதலாளிகளுக்கு ஆணித்தரமாக நிரூபிக்க வேண்டும்.
  • இன்டர்ன்ஷிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கே முழு தொகை வழங்கப்படும்.
உறக்கத்திற்கு ஊதியம்: 100 நாட்கள், 9 மணி நேரம், 1 லட்சம் ரூபாய் – தூங்க தயாரா?  title=

‘ஸ்லீப் இன்டர்ன்ஷிப்?’ (Sleep Internship) நினைவில் இருக்கிறதா? பெங்களூருவைச் (Bengaluru) சேர்ந்த ‘வேக்ஃபிட்’ (WakeFit) என்ற நிறுவனம் தொடங்கிய ஒரு வெற்றிகரமான முயற்சியாகும் இது. 100 நாட்களுக்கு 9 மணிநேர தூக்கத்திற்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு புதிய முயற்சியை செய்தது இந்த நிறுவனம். இப்போது இந்த ஆண்டும் அவர்கள் அதிரடியாக களமிறங்கியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மெத்தை நிறுவனம் (Mattress Company) , கனவிலும் காண முடியாத ஒரு அற்புத ஆஃபரை கொண்டு வந்தது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்களுக்கு நீண்ட நேரம் ஒருவர் தூங்க வேண்டும் என்பதுதான் அது. அப்படி தூங்குபவருக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

இது பலரால் மிகவும் விரும்பப்படும் வேலை வாய்ப்பாக இருக்கும் அதே வேளையில், ​​இந்த நிறுவனத்தில் இன்டர்ன் ஆவது அவ்வளவு எளிதல்ல. தூங்குவதே தங்களது முன்னுரிமை என்றும் தூங்குவதையே தாங்கள் அதிகம் செய்ய விரும்புவதையும் அவர்கள் முதலாளிகளுக்கு ஆணித்தரமாக நிரூபிக்க வேண்டும்.

முந்தைய ஆண்டு இது ஒரு வெற்றிகரமான முயற்சியாக இருந்தது. சுமார் 1.7 லட்சம் வேட்பாளர்கள் இதில் கையெழுத்திட்டனர். அதில் 23 இன்டர்ன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ALSO READ: பிற்பகலில் அதிக நேரம் தூங்குவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்: ஆய்வு!!

தங்கள் இணையதளத்தில், இந்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பப் பணியைத் தொடங்கிவிட்டது. இந்த வித்தியாசமான இன்டர்ன்ஷிப்பைக் கையாள தன்னார்வலர்களின் உதவியையும் நிறுவனம் நாடியுள்ளது.

‘உறக்கம்’ குறித்த மக்களின் மனநிலையை மாற்றுவதும், உறக்கம் ஒழுங்காக இருந்தால் அது ஒருவரை எவ்வளவு துடிதுடிப்பாகவும் திறமையாகவும் வைத்திருக்க முடியும் என்பதை விளக்குவதும் இதன் நோக்கமாகும். இன்டர்ன்கள் அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புப் படுக்கைகளில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை செய்யும் வேளையில், நிறுவனம், 100 நாட்களுக்கு அவர்களது தூக்க முறைகளை கண்காணிக்கும்.

ஆலோசகர்களின் குழு ஒன்றும் இந்த வேளையில் உடன் இருக்கும். உறக்கத்தை கண்காணிக்கும் ‘Sleep Tracker’-களும் இதில் பங்கேற்பவர்களுக்கு அளிக்கப்படும். இந்த இன்டர்ன்ஷிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கே முழு தொகை வழங்கப்படும்.

உறக்கம் என்ற ஒரு இன்றியமையாத விஷயம் இந்நாட்களில் காணக்கிடைக்காத விஷயமாகி வருகிறது. நவீன வாழ்க்கை முறை, மாறிவிட்ட பழக்கங்கள், உணவு முறைகள் என இதற்கு பல காரணங்கள் உள்ளன. எனினும் ஒரு மனிதனின் உடல்நலத்திற்கு உறக்கம் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து அனைவரும் புரிந்து கொண்டு, நம் உடலிற்கு அதற்கான ஓய்வை கண்டிப்பாக அளிக்க வேண்டும்.  

ALSO READ: புதிய தொழில் தொடங்கும் IDEA இருக்கா... அரசிடமிருந்து ₹.10 லட்சம் வரை கடன் பெறலாம்!!

Trending News