SSY Scheme: பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சேமிப்பு திட்டம்

Sukanya Samriddhi Yojana: பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சம்ரிதி யோஜனா சேமிப்பு திட்டத்துக்கு 7.6 விழுக்காடு வட்டி கொடுக்கப்படுகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 3, 2023, 04:29 PM IST
  • பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம்
  • 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெயரில் சேமிக்கலாம்
  • ஒளிமயமான எதிர்காலத்தை கொடுங்கள்
SSY Scheme: பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சேமிப்பு திட்டம் title=

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம்

சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலரால் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். சிறுமிக்கு 18 வயது ஆனதும், அவர் கணக்கு வைத்திருப்பவராவார். இந்தக் கணக்கை ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் திறக்கலாம். SSY கணக்கை எந்த வங்கி அல்லது தபால் அலுவலகத்திலும் திறக்கலாம். பிற வங்கி கிளைகள் அல்லது தபால் நிலையங்களுக்கு எளிதாக மாற்றியும் கொள்ளலாம். இந்த திட்டத்தில் முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் மற்றும் முதிர்வு காலம் 21 ஆண்டுகள்.

மேலும் படிக்க | Business Idea: வெறும் ரூ.5,000 முதலீட்டில் பெரிய அளவில் சம்பாதிக்கலாம்!

சுகன்யா யோஜனா சேமிப்பு 

சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ் கணக்கை குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத் தொகையான ரூ.250-ல் தொடங்கலாம். டெபாசிட் செய்பவர் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இருப்பினும், மாதந்தோறும் குறைந்தபட்ச தொகையை செலுத்தவில்லை என்றால், 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், கணக்கு செல்லாததாக மாறிவிடும்.  எப்போது வேண்டுமானாலும் குறைந்தபட்ச தொகை மற்றும் அபராத தொகை செலுத்தி கணக்கை புதுப்பித்துக் கொள்ளலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா சேமிப்பு பலன்கள்

சுகன்யா ஸ்மரித்தி யோஜனா சந்தாதாரர் 7.6 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுவார். சம்பாதித்த வட்டி ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் கணக்கில் வரவு வைக்கப்படும். வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C-ன் கீழ் விலக்கு பெறத் தகுதியுடையது. அதே பிரிவின் கீழ் வைப்புத் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

ரூ.5 லட்சத்தை பெறுங்கள்

நீங்கள் ரூ.250-ல் கணக்கைத் தொடங்கி, முதல் மாதம் ரூ.750-ஐத் தொடர்ந்து மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்தால், உங்கள் மொத்த ஆண்டு வைப்புத் தொகை ரூ.12,000 ஆக இருக்கும். உங்கள் மகள் பிறந்தவுடன் கணக்கைத் திறந்தீர்கள் என்று வைத்துக் கொண்டால், அவளுக்கு 21 வயதாகும் போது உங்கள் முதலீடு ரூ. 1,80,000 ஆக இருக்கும். அதே சமயம் ரூ. 3,47,445 மதிப்புள்ள வட்டியைப் பெறுவீர்கள். எனவே, 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையாக ரூ.5,27,445 பெறுவீர்கள்.

மேலும் படிக்க | பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் பணம் சம்பாதிக்க 6 வழிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News