புதுடெல்லி: எதிர்மறையான மனப்போக்கு உள்ள இன்றைய சூழ்நிலையில், நம்பிக்கையளிக்கும் செய்திகளைப் பகிர்ந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. சிறிய விஷயங்களில் கூட தங்கள் நெருங்கிய குடும்பத்தினரையும் நம்பாமல் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் நட்புக்கு இலக்கணமான ஒருவர் நட்புக்கு புதிய கோணத்தைக் கொடுத்து கர்ணனாக அவதாரம் எடுத்திருக்கிறார்...
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் நட்புக்கும் நம்பிக்கைக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். நட்பிற்கு நவீன உதாரணமாக திகழும் இந்த நண்பர்கள் டாம் குக் (Tom Cook), ஜோசப் ஃபீனி (Joseph Feeney). இவர்களின் இந்தக் கதையைப் படித்தால் மனிதர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நட்புக்கு ஒரு புதிய பரிணாமம் கிடைக்கும்.
மேற்கு விஸ்கான்சின் மாநிலத்தில் வசிக்கும் இந்த இரண்டு நண்பர்களின் கதை உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. நண்பர்களான டாம் குக் மற்றும் ஜோசப் ஃபீனி 28 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருக்கொருவர் வாக்குறுதியளித்தனர்.
இருவரில் யாருக்காவது ஒருவருக்கு லாட்டரி விழுந்தால், கிடைக்கும் பரிசுத் தொகையை சரி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த வாக்குறுதி!
பொதுவாக இளமையில் கொடுக்கும் வாக்குறுதிகளை அனைவரும் மறந்துவிடுவார்கள், ஆனால் 28 ஆண்டுகளுக்குப் பிறகும், டாம் குக், தனது நண்பர் ஜோசப்பிற்கு அளித்த இந்த வாக்குறுதியை மறக்கவில்லை.
சமீபத்தில் அவர் லாட்டரியில் 164 கோடி ரூபாய் வென்றார். இதில் கவனிக்க வேண்டியது இரண்டு விஷயங்கள். ஒன்று வாக்குறுதியோ மிகவும் பழையது. மற்றொன்று இப்போது 82 கோடி ரூபாய் பரிசுத்தொகையை கொடுக்காவிட்டாலும் அது ஒன்றும் பெரிய குற்றமில்லை.
டாமிற்கு பதிலாக வேறு யாராவது இருந்திருந்தால், இந்த வாக்குறுதியை நினைவில் கூட வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் டாம் குக், தனது வாக்குறுதியையும் நட்பையும் மதித்து, 164 கோடியை இரண்டு சம பாகங்களாக பிரித்து, லாட்டரியில் இருந்து கிடைத்த பணத்தின் பாதியை தனது நண்பரிடம் ஒப்படைத்தார்.
Real Also | உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்...எண்ணமே செயலாகும்... சிந்தனையே சிறப்பாகும்..
லாட்டரியில் பரிசுத் தொகை கிடைத்த செய்தியை நண்பர் ஃபீனியிடம் சொன்னபோது, அவர் சிறிதும் நம்பவில்லை. லாட்டரியில் இவ்வளவு பெரிய தொகையை வென்ற டாம் குக் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். குக்கின் நண்பர் ஃபீனி ஏற்கனவே தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர். இந்த பணத்தைக் கொண்டு எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ளப் போவதாக குக் கூறுகிறார்.
லாட்டரியில் பரிசு வென்ற பிறகு இரு நண்பர்களும் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உள்ளனர். பரிசு பணம் கிடைத்ததை விட, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அதிக மகிழ்ச்சியடைகிறேன் என்று ஒருவர் கூறினால், மற்றொருவரோ “நண்பண்டா” என்று டயலாக் சொல்லி ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்...
பரிசுத் தொகையை ரொக்கமாக வாங்க விரும்பினார்குக். எனவே வரி பிடித்தம் போக 5.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்த்து. Powerball jackpot-ஐ வெல்லும் வாய்ப்புகள் சுமார் 292 மில்லியன்: 1 என்ற விகித்த்தில் தான் இருக்கிறதாம்... ஆனால், அதை விட இன்னும் அரிதான விகிதாச்சாரத்தில் தான் இன்று நட்பு இருக்கும் என்று தோன்றுகிறது!