ரயில் பயணத்தின்போது, பயணிகள் தங்களுக்கு விரும்பமான இருக்கை மற்றும் பெட்டியினை இனி வீட்டில் இருந்தபடியோ தேர்ந்தெடுக்கலாம். இதற்கான வசதியினை IRCTC தற்போது அறிமுகம் செய்துள்ளது.
பயணிகளின் வசதியை மனதில் கொண்டு இந்த பெரிய மாற்றத்தை இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் கார்ப்பரேஷன் (IRCTC) செய்துள்ளது. மேலும் பதிவு விளக்கப்படத்தை ஆன்லைனில் கொண்டு வருவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம் எந்தவொரு பயணியும் தனக்கு விருப்பமான இருக்கை மற்றும் ரயில் பெட்டியினை முன்பதிவு செய்ய இயலும். இந்த வசதியினை பயன்படுத்த பயணிகள் இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் கார்ப்பரேஷன் (IRCTC) மற்றும் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தங்கள் பயண சீட்டினை பதிவு செய்தல் அவசியம் ஆகும்.
அன்லைனில் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்கையில் காலியாக இருக்கும் சீட்டுகளை பயணிகள் பார்க்கும் வசதியை போல், தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவின் போதும் பயணிகள் குறிப்பிட்ட பெட்டிகளில் உள்ள காலி இடங்களை தேர்வு செய்யும் வாய்ப்பு அளிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பயணிகள் தங்கள் தகவல்களை வழங்கும் போது, இருக்கை காலியிடம் குறித்த தகவல்கள் அவர்களுக்க காண்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பயணிகள் தங்கள் படுக்கை இயந்திரத்திலிருந்து எவ்வளவு தூரம் உள்ளது என்பதை அறிந்துக்கொள்ளும் வகையிலும் ரயில்வேயின் பதிவு விளக்கப்படம் பற்றிய தகவல்களையும் பெறுவார்கள் என தெரிகிறது.
ரயில்வே துறையின் இந்த சிறிய முயற்சி பயணத்தின் போது மக்களின் பிரச்சினைகளை பெருமளவில் குறைக்கும் எனவும், அரசாங்க புள்ளிவிவரங்களைப் பற்றி கூறுகையில், ரயில் பயணத்தின் போது மிகவும் சிக்கலானது விருப்பமான இருக்கை கிடைக்காததால் தான். இந்த சிக்கலை சமாளிக்க, ரயில்வே இந்த சேவையை கருத்தில் கொண்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. என்றபோதிலும் இந்த அம்சமானது பயணிகளுக்கு எந்த அளவிற்கு உதவும் என்பது வரும்காலங்களிலேயே தெரியும்...