புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 76 காலி பணியிடங்கள் பல பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 7, 2022, 01:01 PM IST
  • புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
  • பல்வேறு பணிகளுக்கு 76 காலி பணியிடங்கள் இருக்கின்றன
  • அக்டோபர் 21ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்
 புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம் title=

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நிர்வாக பதவிகளுக்கான நேரடி ஆள்சேர்ப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு என 76 பணியிடங்கள் மொத்தம் காலியாக இருக்கிறதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதற்கு ஆன்லைன் மூலம் அக்டோபர் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப் பணியிடங்கள்:

Deputy Registrar, Executive Engineer, Law Officer, Nursing Officer என பல பணிகளுக்கென மொத்தம் 76 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

வயது வரம்பு:

Deputy Registrar – அதிகபட்சம் 50 வயது

Public Relation Officer – அதிகபட்சம் 50 வயது

Executive Engineer Age limit – அதிகபட்சம் 40 வயது

Internal Audit Officer – அதிகபட்சம் 56 வயது

Assistant Registrar- அதிகபட்சம் 40 வயது

Law Officer – அதிகபட்சம் 55 வயது

Hindi Officer – அதிகபட்சம் 35 வயது

Section Officer – அதிகபட்சம் 35 வயது

Private Secretary – அதிகபட்சம் 35 வயது

Nursing Officer – அதிகபட்சம் 30 வயது

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.E./M.Tech. (Civil/Electrical Engineering)/ M.Sc/M.C.A./B.Sc. Nursing/ Bachelors Degree/ Master’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ், இலவச கேஸ் சிலிண்டர் பெறலாம்

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிக்கு என விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

பொது, OBC, EWS விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 எனவும், SC, ST கட்டணம் ரூ.500 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://recruitment.pondiuni.edu.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் அக்டோபர் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | எல்லையோர ஆயுதப் படைகளில் கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலி! இப்படி விண்ணப்பிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News