இரவில் தூக்கம் வரவில்லையா? இந்த உணவுகளை சாப்பிட்டால் நன்றாக தூங்கலாம்!

தினமும் போதுமான அளவிலான தூக்கத்தை பெறவில்லை என்றால் அது உங்கள் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.   

Written by - RK Spark | Last Updated : Feb 19, 2023, 10:56 AM IST
  • பெரியவர்களுக்கு தினமும் 7 முதல் 9 மணிநேரம் வரை தூக்கம் தேவைப்படுகிறது.
  • இரவில் சரியாக தூங்கவில்லையென்றால் பகலில் உங்களால் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது.
  • மூலிகையால் செய்யப்படும் தேநீர் தூக்கத்தை ஊக்குவிக்கிறது.
இரவில் தூக்கம் வரவில்லையா? இந்த உணவுகளை சாப்பிட்டால் நன்றாக தூங்கலாம்! title=

ஒருவரது ஆரோக்கியம் மேம்பட வேண்டுமென்றால் அவருக்கு இரவு நல்ல நிம்மதியான உறக்கம் வேண்டியது அவசியம்.  ஒருவரது ஆரோக்கியமான உடலுக்கு சத்தான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியைப் எந்தளவுக்கு முக்கியமானதோ அதேபோல தான் நிம்மதியான தூக்கமும் ஒருவரது ஆரோக்கியத்திற்கும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.  பெரும்பாலான பெரியவர்களுக்கு தினமும் 7 முதல் 9 மணிநேரம் வரை தூக்கம் தேவைப்படுகிறது.  நீங்கள் தினமும் போதுமான அளவிலான தூக்கத்தை பெறவில்லை என்றால் அது உங்கள் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.  இரவில் சரியாக தூங்கவில்லையென்றால் பகலில் உங்களால் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது, நாள் முழுவதும் சோர்வாகவே உணர்வீர்கள் மற்றும் உங்களால் எந்த விஷயத்திலும் கவனத்தை செலுத்த முடியாமல் போய்விடும்.  தூக்கமின்மை நிலை தினசரி நீடித்தால் அது உங்களுக்கு பல ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.  இரவில் உங்களால் ஒழுங்காக தூங்கமுடியவில்லை என்றால் படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் நீங்கள் சில உணவு வகைகளை சாப்பிட வேண்டும், அப்படி சாப்பிட்டால் இரவில் நல்ல தூக்கத்தை பெறலாம்.

மேலும் படிக்க | கர்ப்பிணி பெண்கள் 'இந்த' உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்! 

1) பால்: 

பாலில் உள்ள டிரிப்டோபான் மற்றும் வைட்டமின் டி ஆகியவை மனிதர்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.  உங்கள் இரவு உணவில் பால் மற்றும் பிற பால் பொருட்களை கொண்ட உணவு வகைகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்களுக்கு இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும்.

2) நட்ஸ்: 

நட்ஸ் வகைகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாகி உள்ளது.  நட்ஸ் மற்றும் விதை வகைகளில் மெலடோனின், துத்தநாகம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் டிரிப்டோபான் போன்ற தாதுக்கள் உள்ளன.  அக்ரூட் பருப்பில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மெலடோனின் ஆகிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.  பாதாம் பருப்பில் அதிகளவு துத்தநாகம் மற்றும் மெலடோனின் நிறைந்துள்ளது.  இதுபோன்ற நட்ஸ் வகைகளில் மக்னீசியம் சத்து நிறைந்துள்ளது, மெக்னீசியம் அளவு குறைவாக இருந்தால் தூங்குவதில் பிரச்சனைகள் ஏற்படும்.  மேலும் பூசணி விதைகளில் டிரிப்டோபனின், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இதனை சாப்பிட இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும்.

3) மூலிகை தேநீர்: 

இயர்கையான மூலங்களிலிருந்து பெறப்படும் மூலிகைகள் பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மைகளை கொண்டிருக்கின்றது என்பது நன்கு தெரிந்த ஒன்றுதான்.  சுவை, நறுமணம் அல்லது சிகிச்சை பண்புகளுக்காக மூலிகைகள் அறுவடை செய்யப்படுகின்றன.  மூலிகைகளை நாம் அடிக்கடி தேநீர், பொடிகள் மற்றும் பிற தயாரிப்புகளாக செய்து சாப்பிடுவது நல்லது.  உதாரணமாக சாமந்திப்பூ தேநீர் பதட்டத்தைக் குறைக்கவும், நல்ல தூக்கத்தை தரவும் உதவுகிறது.  அதேபோல லாவெண்டர் அடிக்கடி வாசனைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டாலும், லாவெண்டர் தேநீர் தூக்கத்தை ஊக்குவிக்கிறது.

4) டார்க் சாக்லேட்டுகள்: 

சாக்லேட் சாப்பிடுவதை சிலர் ஆரோக்கிய குறைபாடு என்று கருதலாம், ஆனால் டார்க் சாக்லேட்டில் இருக்கும் செரோடோனின் ஆனது நீங்கள் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க வைக்க உதவுகிறது.  எனவே சிறந்த தூக்கத்தை பெற நீங்கள் டார்க் சாக்லேட்டால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை சாப்பிடுவது நல்லது.

5) வாழைப்பழம்: 

வாழைப்பழத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது, இது உங்கள் தசைகள் மற்றும் நரம்புகளை தளர்த்துகிறது.  இந்த பழத்தில் கூடுதலாக வைட்டமின் பி-6 உள்ளது, இது டிரிப்டோபனை செரோடோனினாக மாற்றுகிறது.  வாழைப்பழம் சாப்பிடுவது உங்கள் மனநிலையை அமைதியாக்கி நிம்மதியான தூக்கத்தை பெற உதவுகிறது.

மேலும் படிக்க | Weight Loss: ஒல்லியாவது சிம்பிள்! ‘இந்த’ பழக்கத்தை கொண்டு வந்தா ஈசியா எடை குறையும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News