உங்கள் வாட்ஸ்-அப் செயலி எப்போதும் முடகப்படலாம்? எப்படி சரிபார்ப்பது!!

மில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வரும் வாட்சப் செயலியை சில பயனாளிகளின் கணக்கு முடக்கப்படலாம் என அறிவிப்பு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 11, 2019, 01:56 PM IST
உங்கள் வாட்ஸ்-அப் செயலி எப்போதும் முடகப்படலாம்? எப்படி சரிபார்ப்பது!! title=

மில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வரும் வாட்சப் செயலியை சில பயனாளிகளின் கணக்கு முடக்கப்படலாம் என அறிவிப்பு.

உடனடி செய்திகளை பரிமாற பயன்படும் செயலியான வாட்ஸ் அப்பின் பெயரில் கூகுள் ப்ளே ஸ்டோரில் போலியான அப்ளிகேஷன்கள் உள்ளது. அந்த போலியான செயலிகளை பதிவிறக்கம் செய்வது வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களில் போலி  வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இந்த போலி செயலியை பதிவிறக்கம் செய்தவர்களை வாட்ஸ்-அப் நிறுவனம் எச்சரித்து உள்ளது. இந்த போலி செயலின் பயன்பாடுகளைப் பயன்படுத்துவதை நிறுத்தவும். சீக்கிரம் முடிந்தவரை பயனாளிகள் தங்கள் கணக்குகளை உண்மையான WhatsApp-க்கு மாற்றி விடுங்கள் என கேட்டுக்கொண்டு உள்ளது. ஒருவேலை பயனாளர்கள் இதைச் செய்யாவிட்டால், அவருடைய கணக்கு நிரந்தரமாக தடைசெய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

வாட்ஸ்-அப் பயனாளர்கள் பலர் மூன்றாம் நிலை செயலிகளை பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. அதன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. அதில் இரண்டு செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அது GB Whatsapp மற்றும் Whatsapp Plus ஆகும். இந்த செயலிகளின் பயன்பாட்டைப் பயன்படுத்துவது உடனடியாக நிறுத்த வேண்டும் என்று Whatsapp நிறுவனம் தனது பயனாளர்கள் கேட்டுக்கொண்டு உள்ளது. இப்படியான போலி செயலிகளை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. தனிநபர் தொடர்பான தகவல்கள் திருடப்படலாம். அவருடைய தனிப்பட்ட விவரங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மூன்றாம் நபர் கையாளலாம். எனவே உடனடியாக உண்மையான வாட்ஸ்- அப் செயலிக்கு மாறவேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

செயலிகளில் உண்மையான வாட்ஸ் அப் செயலி பின்பற்றும் சட்டங்களை மூன்றாம் நிலை வாட்ஸ் அப் செயலி பின்பற்றுவது இல்லை. இதனால் உங்கள் தரவுகள் திருடப்பட்டு, அது ஆபத்தில் முடியலாம்.

இதனால் போலி வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருபவர்களின் கணக்கு முடக்கப்படலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Trending News