தொலை தூர காதல் நிலைக்குமா? நிலைக்காதா? பதில இங்க தெரிஞ்சிக்கோங்க..

Long Distance Relationship Tips : பலரது காதலனோ காதலியோ வெவ்வேறு ஊர்களில் அல்லது நாடுகளில் இருந்து காதலை வளர்த்துக்கொண்டிருப்பர். இந்த தாெலைதூர காதல் நிலைக்குமா? நிலைக்காதா? இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Sep 26, 2024, 11:51 AM IST
  • காதல் ரிலேஷன்ஷிப் டிப்ஸ்
  • தொலை தூர காதல் நிலைக்குமா?
  • பதிலும், நிலைக்க வைக்க டிப்ஸும் இங்கே!
தொலை தூர காதல் நிலைக்குமா? நிலைக்காதா? பதில இங்க தெரிஞ்சிக்கோங்க.. title=

Long Distance Relationship Tips : அனைத்து காதல் ஜோடிகளுக்கும், தங்கள் ரிலேஷன்ஷிப்பில் ஒரு நிலை வரும். அதுதான், தொலைதூர காதல் நிலை. நேரில் பார்த்து பேசி பழகி காதலித்தவர்கள் ஒரு சில ஆண்டுகள் இப்படி பிரிந்து சென்று காதல் உறவில் இருக்க நேரிடலாம். ஒரு சிலர், வெவ்வேறு ஊர்களில் இருந்துதான் காதலிக்கவே ஆரம்பிப்பர். இப்படிப்பட்ட காதல் உறவுகள் நிலைக்குமா நிலைக்காதா என்கிற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. 

தொலைதூர காதல் நிலைக்குமா? 

பெரும்பாலான காதல் ஜோடிகள், இந்த கேள்விக்கு “நிலைக்கும்” என்ற பதிலையே கூறுகின்றனர். ஆனால், இந்த உறவில் இருப்பவர்கள் தங்களது உறவை வளர்த்துக்கொள்ளவும், நிலை நிறுத்திக்கொள்ளவும் பல்வேறு முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கிறது. அவர்கள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் என்னென்ன தெரியுமா? 

ஆன்லைன் டேட்:

காதலர்கள், ஒரே ஊரில் இருக்கும் போது அடிக்கடி சந்திப்பதை, வெளியில் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால், இருவரும் தொலைதூரத்தில் இருக்கும் போது அதை செய்ய முடியாது. எனவே, ஆன்லைனில் ஒரு டேட்டிங்கை மாதட்ம் 2 அல்லது 3 முறை நிச்சயமாக சந்திக்க வேண்டும். இருவரும் ஒரே படத்தை ஒரே ஓடிடி தளத்தில் பார்க்கும் வசதி இருக்கிறது. அதை செய்யலாம். அல்லது, இருவரும் தனிதனியே ஹோட்டலுக்கு சென்றாலும் வீடியோ கால் செய்து சாப்பிடலாம். 

Long Distance Relationship

பரிசுகள்:

உங்கள் பார்ட்னருக்கு பிடித்த பொருட்களை, அல்லது தேவைப்படும் பொருட்களை அவர்களுக்கு கிஃப்ட் ஆக அனுப்புவது அவர்கள் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். அந்த பரிசுக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு நறுமணம் உங்களுக்கு அவரை நினைவு படுத்தினால் கூட, அந்த வாசனை திரவியத்தை வாங்கி அதை பரிசாக அனுப்பி வைக்கலாம். 

மேலும் படிக்க | ஆண்களே..! காதலிக்கும் போது ‘இந்த’ 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!

நேரம் ஒதுக்குதல்:

உங்கள் பார்ட்னர் உங்களுக்காக நேரம் ஒதுக்கும் போது, உங்களுக்காக ஸ்பெஷலான விஷயங்களை செய்யும் போது நீங்கள் அதை பிரதீபலிக்க வேண்டும். இதனால், இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், ஒன்றாக இருப்பது போல தோன்றும். உங்களுக்குள் இருக்கும் நெருக்கமும் அப்படியே இருக்கும்.

பேசுதல்:

சாதரணமாகவே, ஒரு காதல் உறவில் இருப்பது என்பது கடினமான விஷயம். அதிலும், தொலைதூர காதலில் இருப்பது என்பது, மிகவும் கடினம். எனவே, உங்கள் எண்ணங்கள்-செயல்கள் அனைத்தும் ஒத்து போவதாக இருக்க வேண்டும். இருவருக்கும் ஒருவர் மீது இன்னொருவருக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள், இருவருக்குள்ளும் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பது, சரியாக பேசிக்கொள்வது ஆகியவற்றை செய்ய வேண்டும். 

உறுதியளித்தல்:

தொலைதூர காதல் என்று வரும் போது, சந்தேகம் என்ற ஒன்றும் கூடவே சேர்ந்து பிறக்கும். அதற்கு இடம் கொடுக்காமல்,  இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவற்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் அவரை விட்டு பிரிய போவதில்லை என்பதை சொல்ல வேண்டும். நீங்கள் அவருக்கானவர் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். 

பொறுமை:

காதல் உறவில், பொறுமையும் புரிதலும் இருப்பது மிகவும் அவசியம் ஆகும். உங்கள் பார்ட்னர் நீங்கள் கோபப்படும் போது பொறுமையாகவும், அவர் கோபப்படும் போது நீங்கள் பொறுமையாகவும் இருப்பது அவசியம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலும், ஆறுதல் அளித்தலும் மட்டுமே உங்கள் காதலை காப்பாற்ற முடியும்.

மேலும் படிக்க | 1-1-1-1 விதி... கணவன், மனைவி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் - உறவில் சண்டையே வராது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News