காதலிக்கும்போது, காதலர்கள் பரஸ்பரம் தங்கள் அன்பை வெளிப்படுத்தவும், துணையை ஈர்க்கவும் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பார்கள். தொடக்கத்தில் ஆண் பெண் இருவருமே தங்கள் காதலை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஆனால், அளவிற்கு மிஞ்சினால் எதுவுமே பாதிப்பு தான். ஆரம்ப உறவில் கொஞ்சம் எச்சரிக்கையும் தேவை. உங்கள் காதலின் ஆரம்ப கட்டத்தில் உங்கள் துணைக்கு நீங்கள் தொடர்ந்து மெஸ்சேஜ் அனுப்பினால், அது உங்களைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தலாம். தங்கள் ஆரம்பக் காதலில் கவனமாக இருக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஒரு புதிய உறவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயத்தை மனதில் கொள்ளுங்கள்:
காதலர் எல்லா நேரத்திலும் உங்களோடு பேச வேண்டும் அல்லது நீங்கள் எப்போதும் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. இது சம்பந்தப்பட்ட நபர்களின் விருப்பத்துடன் தொடர்புடையது. எனவே, உங்கள் மகிழ்ச்சிக்காகவும், ஆசைக்காகவும் தொடர்ந்து யாருக்கும் குறுஞ்செய்தி அனுப்புவது சரியல்ல (Love Relationship Tips). யோசிக்காமல் உங்கள் துணைக்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலைகளில், உங்கள் துணைக்கு மெசேஜ் செய்வதன் மூலம் அவரை நீங்கள் கண்காணிக்க நினைக்கிறீர்களோ என்பது போன்ற பல எண்ணங்கள் எழலாம். அதோடு, உங்கள் மனதிலும், நாம் அனுப்பும் மெஸ்சேஜ்களை உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம். அவர் எனக்கு பதில் செய்தி அனுப்பாதது ஏன்? அவன் அல்லது அவள் எங்கே இருப்பார்கள்? அருடைய பதில் ஏன் வரவில்லை போன்ற அனாவசியமான எண்ணங்கள் தோன்றலாம். மேலும், இதன் மூலம் நீங்கள் எப்படியாவது நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்பதே அதன் அர்த்தம். இது சரியானது அல்ல.
மேலும் படிக்க | சிறந்த காதல் ஜோடிகளாக இருக்க வேண்டுமா? இந்த விஷயங்களை பாலோ பண்ணுங்க!
காதல் துணைக்கு அடிக்கடி செய்தி அனுப்புவதால் ஏற்படும் பாதிப்புகள்
1.உங்கள் காதல் துணைக்கு தொடர்ந்து செய்தி அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது அந்த நபரைக் கட்டுப்படுத்துவது போன்றது. செய்திகளை அனுப்புவதன் மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதை நிறுத்துங்கள்.
2. நிச்சயமாக, காதல் துணையிடம் இருந்து தகவல் வரவில்லை என்றால் நீங்கள் கவலைப்படலாம். ஆனால் நீங்கள் அடிக்கடி செய்தி அனுப்புவதால் உங்கள் காதலர் எரிச்சலடையலாம். எனவே, உறவை வலுப்படுத்த, அன்பு மற்றும் நினைவாற்றல் இரண்டையும் சமநிலையில் வெளிப்படுத்துவது நல்லது.
3. நீண்ட காலமாக உங்கள் காதல் துணை உங்கள் செய்திக்கு பதிலளிக்கவில்லை என்றால், உடனடியாக அதை தவறாக நினைக்க வேண்டாம். பலர் மெஸ்சேஜ் அனுப்புவதில் அவ்வளவு ஆர்வம் காட்டாதவர்களாக இருப்பார்க. சிலர் மிகவும் தாமதமாக பதில் அனுப்புவார்கள், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் மற்றும் தொடர்ந்து செய்திகளை அனுப்ப வேண்டாம்.
4. உங்கள் துணையால் உடனடியாக பதிலளிக்க முடியாமல் போகலாம். அவர் சில வேலைகளில் பிஸியாக இருக்கலாம், எனவே அவரது பணியை மனதில் வைத்து செய்திகளை அனுப்பவும்.
5. உங்கள் செய்தி அவசரமாக இருந்தால், அவர்களுக்கு செய்தி அனுப்புவதற்குப் பதிலாக அவர்களை போனில் அழைப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால், அவர்களுடன் உடனடியாக தொடர்பு கொள்ள முடியும். அதோடு அவர்களும் முக்கியத்துவத்தை உணருவார்கள்.
மேலும் படிக்க | உங்கள் குழந்தையுடன் நெருக்கத்தை அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ