சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி (MS Dhoni) ஜார்கண்டில் உள்ள தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஜிம்மிற்கு சென்றுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2022) வரவிருக்கும் சீசனுக்கான பயிற்சியை முன்னாள் இந்திய கேப்டன் தொடங்கிவிட்டார்.
ஜிம்மில் பயிற்சிகளை முடித்த பிறகு, அங்கு வந்த சில ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப்களில் கையெழுத்திட்டார் தோனி.
பயிற்சி செய்து சோர்வாக இருந்தாலும் ரசிகர்களை மதிக்கும் பண்பு இது என்று அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனை பாராட்டுகின்றனர்.
Exclusive from JSCA gym! Iconic autograph
Bajaj Sumeet Kumar/ig
— Nithish Msdian (@thebrainofmsd) February 8, 2022
ஒருபுறம் தோனியின் சிஎஸ்கே மற்றும் ஐபில் அணிகளின் உரிமையாளர்கள் தற்போது ஐபிஎல் 2022 ஏலத்திற்கான உத்திகளை உருவாக்குவதில் மும்முரமாக உள்ளனர்,
இந்த ஆண்டு ஐபில் போட்டிகளுக்கான ஏலம் இன்னும் சில நாட்களில் ஆதாவது பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2022 ஏலத்திற்கு முன்னதாக ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மொயின் அலி மற்றும் ஆரஞ்சு கேப் வைத்திருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டது.
ஏலத்தில் 21 வீரர்களை வாங்க, நடப்பு ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இன்னும் 42 கோடி ரூபாய் தொகை எஞ்சியுள்ளது.
ALSO READ | மும்பை கேப்டனாக விரும்பினாரா ஹர்திக் பாண்டியா?
ஐபிஎல் 2022 ஏலத்திற்கான நேரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தின் இறுதியில், அதாவது சனி மற்றும் ஞாயிறு (பிப்ரவரி 12 மற்றும் 13) IST மதியம் 12:00 மணிக்கு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன், தல தோனியின் வீடியோ வெளியாகி பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது.
தோனி இருக்க பயமேன் என்றும், பொறுமையே சிறந்த தலைமைப் பண்பு என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனியின் (MS Dhoni) பொறுமையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்ற்னர்.
ALSO READ | தோனி விரைவில் வெளியிடப்போகும் அறிவிப்பு
ALSO READ | 'எம்எஸ் தோனி என் மனைவி அல்ல': ஹர்பஜன் சிங் காட்டம்!
ALSO READ | மும்பை அணி இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுத்த 5 வீரர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR