Yellow Teeth: 7 நாட்களில் மஞ்சள் பற்கள் முத்து போல் ஜொலிக்க சில டிப்ஸ்..!!

பற்களை வெண்மையாக்கும் டூத் பேஸ்ட், வைத்தியம் என பல வகையில்  முயற்சித்தாலும், உங்கள் பற்கள் முத்து போல் பளபளக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 24, 2021, 08:02 PM IST
  • 7 நாட்களில் மஞ்சள் பற்களை பளிச்சிடச் செய்யும் வீட்டு வைத்தியம் .
  • உங்கள் பற்கள் முத்துக்கள் போல் ஜொலிக்கும்.
  • எளிய வீட்டு வைத்தியம் சிறந்த தீர்வை அளிக்கும்.
Yellow Teeth: 7 நாட்களில் மஞ்சள் பற்கள் முத்து போல் ஜொலிக்க சில டிப்ஸ்..!! title=

Yellow Teeth Treatment: பற்களை வெண்மையாக்கும் டூத் பேஸ்ட், வைத்தியம் என பல வகையில்  முயற்சித்தாலும், உங்கள் பற்கள் முத்து போல் பளபளக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். இந்தச் செய்தியில், உங்களுக்காக மிகவும் எளிதான மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியத்தை அறிந்து கொள்ளலாம்.

உண்மையில், பற்கள் ஆரோக்கியம் உங்கள் ஒட்டுமொத்த ஆளுமையில், தோற்றத்தில் முக்கிய பங்கை கொண்டிருக்கிறது. வாய் துர்நாற்றம், மஞ்சள் பற்கள், பற்கள் இடையில் இடைவெளி, ஈறுகளில் ரத்தம் வருதல் போன்ற பிரச்சனைகள் பொது இடத்தில் உங்களை தர்ம சங்கடப்படுத்தும். பற்களின் மஞ்சள் நிறத்தைப் போக்க, வீட்டில் தயாரிக்கும் இந்த பற்பொடி சிறந்த வகையில் பலன் கொடுக்கும்.   

ALSO READ | Jaggery: இரவு நேரத்தில் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!!

பற்பொடி தயாரிக்கும் முறை: 

1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள்

1 தேக்கரண்டி கருப்பு அல்லது கல் உப்பு

1 தேக்கரண்டி அதிமதுரம்

1 தேக்கரண்டி கிராம்பு தூள்

சிறிது உலர்ந்த வேம்பு மற்றும் உலர்ந்த புதினா இலைகள்

இந்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒன்றாக பொடி செய்யவும்

பின்னர், தனை டப்பாவில் சேமித்து வைத்தும் பற்பொடியாக பயன்படுத்தவும்

இந்தப் பொடியைக் கொண்டு சுமார் 7 முதல் 10 நாட்கள் வரை பிரஷ் செய்யவும். இதனால், விரைவில் உங்கள் பற்கள் பிரகாசமாக மாறும். கல் உப்பு இயற்கையாகவே பற்களின் பளபளப்பை அதிகரிக்கிறது. இதனை பயன்படுத்துவதால் பற்கள் வெண்மையாக மாறும். வேம்பு, புதினா ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.)

ALSO READ | Weight loss Yoga: தொப்பை குறைய ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News