32 மில்லியன் Followers பெற்ற பாலிவுட் சூப்பர்ஸ்டார்!!

அமிதாப் பச்சனை ட்விட்டரில் சுமார் 32 மில்லியன் நபர்கள் பின் தொடர்கிறார்கள்.

Last Updated : Dec 17, 2017, 09:11 AM IST
32 மில்லியன் Followers பெற்ற பாலிவுட் சூப்பர்ஸ்டார்!! title=

பாலிவுட் திரையுலகில் மூத்த நடிகராக விளங்குபவர் அமிதாப் பச்சன். இவர் தற்சமயம் திரைப்படங்களில்  ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் அவர்தான் டாப் ஆப் தி இந்தியன் சினிமாவாக விளங்குகிறார். 

கதாநாயனாக இருந்த போது சம்பாதித்த புகழைவிட அவர் தற்சமயம் நடிக்கும் கேரக்டர் ரோல்களின் மூலம் பெரும் புகழை சம்பாத்து வருகிறார். சினிமா கிராஃப்பில் "பா" மற்றும் "சமிதாப்" என்ற பெயரில் உச்சத்தில் இருக்கிறார். இதை தவிர அமிதாப்பை விளம்பரங்களில் நடிக்க வைக்க கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் அமிதாப் பச்சனை ட்விட்டர் கணக்கில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 32 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதனை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள். 

அமிதாப் இந்தக் கணக்கை தொடங்கியத்தில் இருந்து 60 ஆயிரம் ட்விட்கள் போட்டிருக்கிறார். அவர் 1,164 பேர்களை மட்டுமே பின் தொடர்ந்து வருகிறார். ஆனால் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 32 மில்லியன். அதாவது, 3 கோடியே 20 லட்சம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள்.

Trending News