33 நட்சத்திரங்கள் இணைந்து வெளியிடும் AV33 ஃபர்ஸ்ட் லுக்!

அருண் விஜய் இயக்குனர்  ஹரி கூட்டணியில் உருவாகும் AV33 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2021, 09:03 AM IST
33 நட்சத்திரங்கள் இணைந்து வெளியிடும் AV33 ஃபர்ஸ்ட் லுக்!  title=

தனது கடின உழைப்பால் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த பிறகு நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய். குற்றம் 23, தடம், செக்கச் சிவந்த வானம் என தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் படங்கள் ஹிட் அடித்தன.  பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாகோ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளித்தார் அருண்விஜய்.

Arunvijay

அருண் விஜய் நடிப்பில் சினம்,பார்டர், அக்னி சிறகுகள் போன்ற படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக சரியான வெளியீடு தேதி கிடைக்காமல் இன்னும் இந்த படங்கள் வெளிவராமல் உள்ளன.  அருண்விஜய், ரித்திகா சிங் கூட்டணியில் பாக்ஸிங் என்ற படம் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.  இந்நிலையில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் புதிய படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.  இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 3-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு ஹரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், படப்பிடிப்பு தடைப்பட்டது. பின்பு கொரோனா 2-வது அலையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் குறைந்து இதர படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டாலும், ஹரி - அருண் விஜய் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது. பின்பு சமீபத்தில் AV 33 படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி,ராமேஸ்வரம் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்றது.  இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சக்திவேல், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், எடிட்டராக ஆண்டனி, கலை இயக்குநராக சக்தி வெங்கட் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது.  33 செலிபிரிட்டிகள் இணைந்து அருண் விஜய் 33 படத்தின் தலைப்பை வெளியிடுகின்றனர்.  ஹாரி சூர்யாவை வைத்து எடுக்க இருந்த அருவா படம் ட்ராப் ஆனதும், ஜெயம் ரவியை வைத்து யானை என்று ஒரு படத்தினை எடுக்க திட்டமிட்டிருந்தார்.  தற்போது அந்தக் கதையில் தான் அருண் விஜய் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News