விவேகம் ரிலீஸ்: அஜித்துக்கு கமல் வாழ்த்து!

Last Updated : Aug 24, 2017, 11:09 AM IST
விவேகம் ரிலீஸ்: அஜித்துக்கு கமல் வாழ்த்து! title=

அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நடித்துள்ள விவேகம் படம் குறித்து கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தல அஜித் நடித்த விவேகம் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘விவேகம்’  திரைப்படம் இன்று உலக முழுவதும் பிரம்மாண்டமான முறையில் வெளியானது. இதில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

‘தல’ அஜீத்தின் ‘விவேகம்’  திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியான முதல் டிரைலர் வரை பெரும் ஆதாரவு கிடைத்தது. சமூக வலைத்தளங்களிலும் பெரிதாக வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் நடிகர் கமலஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனுடன் இந்த படத்தை பார்ப்பதாகவும் இந்த படம் குறித்து நல்ல செய்திகளே கேள்விப்படுவதாக நடிகர் கமலஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

 

Trending News