பிரபல நடிகரின் 20 வயது மகள் உயிரிழப்பு! காரணம் என்ன?

Actor Krishnan Kumar Daughter Tishaa Kumar Dies : ஒரு சினிமா பிரபலத்தின் 20 வயது மகள் ஒருவர், உயிரிழந்திருக்கிறார். அவர் யார்? உயிரிழந்தது எப்படி? முழு விவரத்தை இங்கு பார்ப்பாேம்.     

Written by - Yuvashree | Last Updated : Jul 19, 2024, 03:35 PM IST
  • பிரபல நடிகரின் செல்ல மகள் உயிரிழப்பு
  • 20 வயதில் உயிர்நீத்தார்!
  • உயிரிழப்பிற்கான காரணம் என்ன?
பிரபல நடிகரின்  20 வயது மகள் உயிரிழப்பு! காரணம் என்ன?  title=

Actor Krishnan Kumar Daughter Tishaa Kumar Dies : இந்திய திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான கிருஷ்ண குமாரின் மகள், திஷா குமார் உயிரிழந்திருக்கிறார். மிக இளம் வயதிலேயே உயிரிழந்திருக்கும் இவர் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தயாரிப்பாளரின் மகள்:

இந்திய திரையுலகின் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் கிருஷ்ண குமார். டி-சீரீஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். இவர், தான்யா சிங் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட இவரது குடும்பத்தினர் அனைவருமே, சினிமாவை தொழிலாக கொண்டவர்களாக இருக்கின்றனர். இவருக்கு திஷா குமார் என்ற மகள் இருக்கிறார்.
20 வயதில் உயிரிழந்தார்!

டி-சீரீஸ் நிறுவனம் இன்று ஒரு அதிர்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதில், திஷாவிற்கு முன்னரே புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், இதனால் அவருக்கு ஜெர்மனியில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, நீண்ட நாட்களாக புற்றுநோய் பாதிப்புடன் போராடி வந்த அவர், நேற்று உயிரிழந்ததாகவும் திஷாவின் குடும்பத்தினரின் ப்ரைவசிக்கு இந்த நேரத்தில் மரியாதை கொடுக்குமாறும் அந்த நிறுவனத்தின் செய்தி குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மிக இளம் வயதிலேயே திஷா உயிரிழந்திருக்கும் சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மேலும் படிக்க | Kazan Khan: பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்..! தென்னிந்திய திரையுலகை துரத்தும் சோகம்...

திஷா குறித்து:

தற்போது உயிரிழந்திருக்கும் திஷா, செப்டம்பர் 6ஆம் தேதி 2003ஆம் ஆண்டு கிருஷ்ணாவிற்கும் தான்யா சிங்கிற்கும் பிறந்த மகள் ஆவார். இது தவிர, அவர் குறித்த தகவல்கள் அனைத்தும் பிரைவேட்டாக வைக்கப்பட்டிருக்கிறது. தந்தையும் தாயும் இந்திய திரையுலகில் பெரிய நடிகர்-நடிகைகளாக இருந்தாலும், இன்னும் சினிமா உலகில் பிரபலமாக வலம் வந்தாலும், தங்களது மகளை பெரிதும் வெளி உலகிற்கு காட்டாமலேயே இருந்து வந்தனர். ஆனால், டி-சீரீஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் ஸ்கிரீனிங்கிள் இவர் அடிக்கடி காணப்பட்டார். இது தவிர, தனது தனிப்பட்ட வாழ்வையும் எந்த சமூக வலைதளத்திலும் வெளியிடுவதையும் இவர் விரும்ப மாட்டாராம். அந்த அளவிற்கு தனது வாழ்க்கை குறித்தும், நோய் குறித்தும் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். 

கடைசியாக மக்கள் முன்னிலையில்:

திஷா கடைசியாக கடந்த ஆண்டு 2023ஆம் ஆண்டு அனிமல் படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கிள் கலந்து கொண்டார். இதனை டி-சீரீஸ் நிறுவனம் இயக்கியிருந்தது. இந்த படத்தின் விழாவில் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கிள் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் தனது தந்தை கிருஷ்ணனுடன் இருந்தார். அந்த படத்தின் விழாவில் அவரை பார்த்த மக்கள், தற்போது இவர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | Bharathi Kannamma: பாரதி கண்ணம்மா நடிகை திடீர் மரணம்..காரணம் என்ன?அதிர்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News