Actor Vijay Meet Student: விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 17 ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் (Vijay Makkal Iyakkam) சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023ம் ஆண்டு நடந்து முடிந்த "10 மற்றும் 12-ஆம்" வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை வரும் 17-ஆம் தேதி சந்திக்க உள்ளார் நடிகர் விஜய். இதனிடையே, நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பாக ரசிகர்கள் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
மேலும் படிக்க - 234 தொகுதிகளிலும் மதிய உணவு - விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு!
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
• அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக @TVMIoffl ,
வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று சென்னை நீலாங்கரையில் உள்ள "RK Convention Centre-ல்" 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்… pic.twitter.com/OCc1eiX6UV
— Bussy Anand (@BussyAnand) June 7, 2023
இதனால், விஜய் விரைவில் அரசியல் வர உள்ளார் என பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில், உலக பட்டினி தினத்தில் அனைவருக்கும் மத்திய உணவு வழங்க விஜய் வலியுறுத்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு வழங்கப்பட்டது. மேலும், சமுதாய தலைவர்கள் பிறந்தநாள் விழாவில் ரசிகர்களை பங்கேற்க செய்து அரசியல் மையப்படுத்துகிறார் விஜய்.
அரசியல் களத்தில் கால்பதிக்கவுள்ள நடிகர் விஜய் தனது நலத்திட்டங்களில் தொகுதியை மையப்படுத்தி அறிக்கை வெளியாகி வருகிறது. தொகுதி வாரியாக மத்திய உணவு, தொகுதி வாரியாக 3 இடங்கள் பிடித்த மாணவர்கள் என தொகுதியை மையப்படுத்தி அறிக்கை வெளியிடப்படுகிறது. எனவே, தொகுதி என்பதை குறிப்பிட்டு அறிக்கைத் தரும் விஜய் அரசியல் களத்திற்கு ஆயுத்தமாவதாக ரசிகர்கள் எதிர்பார்த்துருக்கிறார்கள். இதனால், 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக தொகுதிகளை மையப்படுத்தி வருகிறாரா? விஜய் எனவும் கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். 90’ஸ்களில் தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய படங்கள் மூலம் திரையுலகிற்குள் பிரவேசித்து இன்று கோலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டாராக திகழ்கிறார். ரஜினி தான் எப்போது அரசியலுக்கு வரப்போகிறேன் என்பதை அவரது படங்களின் பஞ்ச் டைலாக்குகள் மூலம் க்ளூ கொடுத்தது விஜய்யும் தனது ரசிகர்களுக்கு படங்களின் மூலம் அவ்வப்போது ஹிண்ட் கொடுத்து வருகிறார். தான் நடிக்கும் அனைத்து பட விழாக்களிலும் குறிப்பாக இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்ள தவற மாட்டார், நடிகர் விஜய்.
சில ஆண்டுகளாக இவர் நடித்து வெளிவரும் படங்களில் அரசியல் வாடை கொஞ்சம் அதிகமாகவே வீசுகின்றன. தலைவா படத்தில் ஆரம்பித்த இந்த அரசியல் சர்ச்சை இன்றுவரை ஓயாமல் உள்ளது. அதை தூண்டிவிடும் வகையில், நடிகர் விஜய்யும் கிடைக்கும் தருவாயில் எல்லாம் “குட்டி ஸ்டோரி” கூறுகிறேன் என்ற பெயரில் ஏதாவது ஒரு கதையை கூறி அதிலும் அரசியல் புதிர் போடுவார். இதனால் இவருக்கு அரசியல் ஆசை இருக்குமோ என்ற சந்தேகம் வெகுநாட்களாகவே பலரது மனங்களில் இருந்து வருகிறது.
மேலும் படிக்க - மக்கள் பசிபோக்கும் விஜய் மக்கள் இயக்கம்.. தமிழ்நாடு முழுக்க பசியாறிய ஏழை மக்கள்..
விஜய் மக்கள் நீதி மைய நிர்வாகிகள், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளோரின் விவரங்களை சைலண்டாக கலெக்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்தும், கடந்த 2020ஆம் ஆண்டு முதலே விஜய் விரைவில் அரசியல் களமிறங்குவார் என கூறிவருகிறார். இது உண்மையிலேயே நடக்குமா? 2026ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவாரா என்பது போன்ற கேள்விகள் ரசிகர்களின் மனங்களில் எழுந்துள்ளது.
மேலும் படிக்க - தலித் மக்களை டார்கெட் செய்யும் விஜய்... பூவை ஜெகன் மூர்த்தி விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ