அஜித்தின் வலிமையை பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்

வலிமை பிரமாண்ட வெளியீட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் மலேசியா தல அஜித் ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷனால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 28, 2022, 02:26 PM IST
  • படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் அமைந்துள்ளது.
  • வலிமை சுமார் 28 கோடி ருபாய் வசூலை பெற்றுள்ளது.
  • ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளது.
அஜித்தின் வலிமையை பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர் title=

ரசிகர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அஜித்தின் 'வலிமை' படம் கடந்த 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவான இந்த படம் அதிக வசூலையும் பெற்றுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தில் கார்த்திகேயா, ஹுமா குரேஷி, புகழ், சுமித்ரா, குர்பானி நீதிபதி போன்ற பலர் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் அமைந்துள்ளது, இதுவரை தமிழ் படங்களில் பார்த்திடாத அளவிற்கு ரேஸ் காட்சிகள் அமைந்துள்ளது. இந்த படம் ஆரம்பத்திலேயே சுமார் 28 கோடி ருபாய் வசூலை பெற்றுள்ளது, இது எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு வசூலாக பார்க்கப்படுகிறது. படம் வெளியான தினத்திலிருந்தே அனைத்து திரையரங்குகளிலும் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லாக இருந்தது. படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் காருக்கு கூட ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து பட வெளியீட்டை கோலாகலமாக கொண்டாடினர்.

மேலும் படிக்க | 3 நாளில் 100 கோடி ரூபாயை கடந்த வலிமை வசூல்

இந்த படம் தமிழில் எந்த அளவுக்கு கொண்டாடப்படுகிறதோ அதே அளவுக்கு தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து இருக்கிறதோ அதே அளவிற்கு இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பல ரசிகர்களின் காலர் டியூன்களாக ஒலித்து கொண்டிருக்கிறது. இப்படத்தை வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

அத்துடன் வலிமை பிரமாண்ட வெளியீட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் மலேசியா தல அஜித் ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷனால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மலேசிய மனித வளத்துறை அமைச்சரும் தீவிர தல அஜித் ரசிகரான டத்தோ எம். சரவணன் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் சிஇஓ டத்தோ அப்துல் மாலிக் தஸ்திகர் கலந்துகொண்டனர் .

இந்திய சிறப்பு சூப்பர் பைக்கர்களின் சாகசங்கள் , சிங்க நடனம் மற்றும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன்ளிகளுக்கு திரைப்படத்தைப் பார்க்கவும், அஜித் நற்பணி அறக்கட்டளைக்கு மலேசிய பண மதிப்பில் ரொக்கம் மற்றும் இலவச சானிடைசர்கள் மற்றும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது. அனைவரும் படத்தை ரசித்தார்கள். மலேசியா தல அஜித் ரசிகர் மன்றம் நிறைய தொண்டுகளை செய்துள்ளது. முக்கியமாக கொரோனா தொற்றின் போதும், மலேசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான இளைஞர் அதிகாரமளிக்கும் நிறுவனமாகவும் உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க | AK61: அஜித்துடன் நடிக்கப்போகும் பிக்பாஸ் பிரபலம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News