நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ’வலிமை’. பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்துக்கு, வெளியாகும் முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் பிப்ரவரி 24 ஆம் தேதி திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடின. குறிப்பாக, படம் வெளியாவதற்கு முந்தை நாளே தியேட்டர் வாசல்களில் குவியத் தொடங்கிய ரசிகர்கள், விடியவிடிய ஆட்டம் பாட்டத்துடன் வலிமையை பார்க்க தயாராக இருந்தனர்.
மேலும் படிக்க | வலிமை முதல் நாள் கலெக்ஷன் - அண்ணாத்த சாதனையை முறியடித்ததா?
காலை 5 மணிக்கு படம் திரையிடப்பட்டவுடன் தியேட்டர்களுக்கு உள்ளே கலர் காகிதங்களை பறக்கவிட்டு, வலிமை திரைப்படத்தை கொண்டாடி தீர்த்தனர். இதேபோல், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வலிமை திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால், அண்ணாத்த மற்றும் சர்கார் ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை கம்பீரமாக முறியடித்தது. தமிழ் திரைப்பட உலகில் 33 கோடி ரூபாய் வசூலித்து முதல் நாள் வசூலில் முதல் இடத்தில் இருந்த அண்ணாத்த படத்தை எதிர்பார்த்ததுபோலவே வலிமை ஓவர்டேக் செய்தது.
சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்து வலிமை. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால், வலிமை படத்துக்கு தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. மக்களின் வருகை வசூலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வலிமையின் பாக்ஸ் ஆஃபீஸ் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, வலிமை திரைப்படம் கடந்த 3 நாட்களில் மட்டும் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தின் வசூலை ஆஸ்திரேலியாவில் ஓவர்டேக் செய்திருக்கும் வலிமை, விஸ்வாசம் வசூலையும் விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Actor #AjithKumar 's #Valimai has crossed the ₹ 100 Cr Gross mark at the WW Box office.. In 3 days..
— Ramesh Bala (@rameshlaus) February 27, 2022
மேலும் படிக்க | வலிமை படத்தில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR