புதிய கெட்டப்.. 75 வயதிலும் கலக்கும் அமிதாப் பச்சன் :வைரல்

75 வயதிலும் அடையாளம் தெரியாதா அளவுக்கு காட்சியளிக்கிறார் அமிதாப் பச்சனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 29, 2018, 04:47 PM IST
புதிய கெட்டப்.. 75 வயதிலும் கலக்கும் அமிதாப் பச்சன் :வைரல்  title=

தெலுங்கு நடிகர் ராம் சரண் தயாரிப்பில் தனது தந்தை நாயகனாக நடிக்கும் படம் சாய் ரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, நாசர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் தெலுங்கு, மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகுகிறது. 

இந்த படம் "உயாலவாடா நரசிம்ம ரெட்டி" வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் அமிதாப் பச்சன் துறவி போல அடையாளம் தெரியாதா அளவுக்கு காட்சியளிக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News