அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்: குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்ட சண்முகம்..

Anna TV Serial Today's Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு அண்ணா சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2024, 02:27 PM IST
அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்: குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்ட சண்முகம்.. title=

Zee Tamil TV Serial Anna: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகத்தின் தங்கைகளும் வைகுண்டமும் சௌந்தரபாண்டி காலில் விழுந்து கெஞ்ச அவர் சண்முகத்தை காப்பாற்ற முடியாது என்று துரத்தி விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, மீண்டும் பரணியிடம் கெஞ்ச அவள் ஷண்முகம் இனிமே அருவாள் எடுக்க மாட்டேன்னு சொல்ல சொல்லுங்க நான் அம்மாவிடம் பேசுறேன் என்று சொல்கிறாள், ஷண்முகம் என்னால் அப்படி சொல்ல முடியாது. என்ன நடந்தாலும் சரி அதை நான் பார்த்துகிறேன் என்று சொல்கிறான். 

இதையடுத்து கோர்ட்டுக்கு எல்லாரும் வந்து சேர்க்கின்றனர். பாக்கியத்தையும் அழைத்து வர அவள் சண்முகத்தை பார்க்க ஷண்முகம் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான். எல்லாரும் பாக்கியம் சொல்ல போவது என்ன என்ற பதற்றத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

மேலும் படிக்க - ஆவேசமான மனோகரி.. உடையும் உண்மை “நினைத்தேன் வந்தாய்” இன்றைய எபிசோட் அப்டேட்

அடுத்ததாக நீதிமன்றம் கூடுகிறது, ஷண்முகத்தையும் பாக்கியத்தையும் கூண்டில் ஏற்றி விசாரணையை தொடங்குகின்றனர். முதலில் பாக்கியத்திடம் நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்திய வாக்குமூலம் வாங்கி கொண்டு விசாரணையை தொடங்குகின்றனர். 

கத்தி குத்து சம்பவத்தில் நடந்தது என்ன என்று கேட்க பாக்கியம் ஒவ்வொன்றாக விளக்கி சொல்கிறாள். இறுதியாக உங்களை கத்தியால் குத்தியது இந்த ஷண்முகம் தானே என்று கேட்க பாக்கியம் ஷண்முகமா? அவன் எப்படி என்னை குத்துவான்? என்னை குத்தியவன் பார்க்கறதுக்கு என் புருஷன் உருவ ஜாடையில் தான் இருந்தான் என்று சொல்ல சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். 

பிறகு கோர்ட் ஷண்முகத்தை விடுதலை செய்து இந்த வழக்கை விசாரித்து குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசுக்கு உத்தரவிடுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - பொது இடத்தில் கன்னத்தில் அறை வாங்கிய நடிகர் - நடிகைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News