புத்தாண்டில் மெகா பரிசு... இனி இவர்களுக்கு ரூ.25 லட்சம் - மகிழ்ச்சி கடலில் அரசு ஊழியர்கள்!

Gratuity Hike, New Year 2025: வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த மாநிலத்தின் அரசு ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி 25% உயர்த்தப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Dec 29, 2024, 02:58 PM IST
  • இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.
  • தற்போது கிராஜுவிட்டி ரூ.20 லட்சமாக வழங்கப்பட்டது.
  • இதில் 25% உயர்த்தப்பட்டுள்ளது.
புத்தாண்டில் மெகா பரிசு... இனி இவர்களுக்கு ரூ.25 லட்சம் - மகிழ்ச்சி கடலில் அரசு ஊழியர்கள்! title=

Gratuity Hike For Government Employees New Year 2025: பல்வேறு அரசு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழுவின் அடிப்படையில் மாத ஊதியம், அகவிலைப்படி, கிராஜுவிட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 7ஆவது ஊதியக்குழுவின் கீழ் ஹரியானா அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இறப்பு மற்றும் ஓய்வூதிய கிராஜுவிட்டியை 25% உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

அரசு ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி தற்போது ரூ.20 லட்சமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 25% உயர்த்தப்படுவதன் மூலம், வரும் 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் ரூ.25 லட்சமாக கிராஜுவிட்டி உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராஜுவிட்டி உயர்வு

இதுகுறித்த அறிவிப்பு நேற்று (டிச. 28) ஹரியானா அரசால் வெளியிடப்பட்டுள்ளது. ஹரியானா முதலமைச்சர் நயப் சிங் சைனி தலைமையிலான அமைச்சரவை அரசு ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் படிக்க | உணவு வழங்குவதில் தாமதம்! திருமணத்தை நிறுத்தி வேறு பெண்ணை மணந்த மணமகன்!

கிராஜுவிட்டி குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில்,"மாநில அரசின் நீதித்துறை அதிகாரிகளுக்கான இறப்பு மற்றும் ஓய்வூதியத்தின் கிராஜுவிட்டி உச்சவரம்பை 25 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு மேம்பட்ட நிதி பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டே அரசு முடிவை எடுத்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

EDC விகிதங்கள்

இதுமட்டுமின்றி, புற வளர்ச்சிக் கட்டணங்களைக் கணக்கிடுவதற்கான குறியீட்டு கொள்கையின் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. "2015 ஆம் ஆண்டிற்கான புற வளர்ச்சிக் கட்டணங்களில் (EDC - External Development Chargaes) விகிதங்களை அடிப்படையாகக் கொண்ட குறியீட்டு கொள்கையானது கடந்த எட்டு ஆண்டுகளாக இன்றுவரை அதிகரிக்கப்படவில்லை.

மேலும் குறியீட்டுக் கொள்கை வருவதற்கு முன், ஒவ்வொரு ஆண்டும் EDC விகிதங்கள் 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டதாகவும், அதன்படி, இனிமேல், ஒவ்வொரு ஆண்டும் EDC விகிதங்களை 10 சதவிகிதம் அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுள்ளதாகவும் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்கால அடிப்படை EDC விகிதங்களை தீர்மானிக்க ஒரு ஆலோசகர் அமர்த்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகளில் இனி இது கட்டாயம்

தமிழ்நாட்டில் டின்பிஎஸ்சி போன்று ஹரியானாவில் இருக்கும் ஹரியானா அரசு பணியாளர் தேர்வாணையம் (HPSC - Haryana Public Service Commission) தேர்வுகளுக்கும் இனி ஆதார் அட்டை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்த அறிக்கையில், "ஹரியானா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் ஏ மற்றும் குரூப் பி பதவிகளுக்கான தேர்வுகளில் விண்ணப்பிப்பதற்கு தேர்வாளர்களிடம் ஆதார் அட்டை சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்பது இனி கட்டாயமாக்கப்படுகிறது. இதனால், அரசு வேலையில் ஆட்சேர்ப்பு நேர்மையானதாகவும், போலி நபர்கள் உள்ளே நுழைவதை தடுப்பதாகவும் அமையும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹரியானாவில் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக கடும் பயிர் சேதம் அடைந்திருப்பதால் விவசாயிகள் இழப்பீடு கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக, இழப்பீடுகளை கணக்கீடு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | RBI புதிய விதி 2025: ஜனவரி 1 முதல் இந்த 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News