சமந்தா-விஜய் தேவரகொண்டா பட அப்டேட்.. இரண்டாம் சிங்கிள் ப்ரோமோ இதோ

'குஷி' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாம் பாடலான ஆராத்யா பாடல் 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகி உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 10, 2023, 05:07 PM IST
  • தயாரிப்பாளர்கள் ஒரு அபிமான போஸ்டரையும் வெளியிட்டனர்.
  • விஜய்யும் சமந்தாவும் காதல் போஸில் காணப்படுவார்கள்.
  • முழு பாடலுக்காக ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது.
சமந்தா-விஜய் தேவரகொண்டா பட அப்டேட்.. இரண்டாம் சிங்கிள் ப்ரோமோ இதோ title=

சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் குஷி படத்தின் அப்டேட் இதோ: தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' குஷி' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "ஆராத்யா" பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் 'குஷி' திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் இரண்டாம் பாடலுக்கு ஆராத்யா என பெயரிடப்பட்டிருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு 'ஹ்ரிதயம்' திரைப்படத்திற்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது. அதன்படி ஆராத்யா என தொடங்கும் அந்த பாடலின் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது, மேலும் முழு பாடல் வருகிற ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர்கள் ஒரு அபிமான போஸ்டரையும் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் காதல் போஸில் காணப்படுவார்கள். போஸ்டர் மட்டும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி முழு பாடலுக்காக ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது. 

மேலும் படிக்க | Thalapathy 68 அப்டேட்! 21 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் பிரபல ஹீரோ?

 

'குஷி' திரைப்படம் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரூத் பிரபு நடித்திருக்கும் காதல் கதை. முன்னதாக இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருந்த முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடத்தில் கவனத்தை கவர்ந்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிதி பங்களிப்புடன் சிவா நிர்வாணா இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா ரூத் பிரபு, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, ரோகிணி, வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹேப் இசையமைத்திருக்கிறார்.

காஷ்மீர் பின்னணியில் அழகான காதல் கதையாக இந்த திரைப்படம் திரையிடப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற மொழிகளில் வெளியாகிறது.

இதற்கிடையில் குஷி திரைப்படத்தைத் தவிர, அமேசான் பிரைம் வீடியோ வலைத் தொடரான ​​சிட்டாடலின் இந்திய பகுதிகளிலும் சமந்தா நடித்துள்ளார். டைமெரி என் முராரியின் 2004 ஆம் ஆண்டு அதிகம் விற்பனையான தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் நாவலின் தழுவலான சென்னை ஸ்டோரி என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும்: நீதிபதி முன்பு மீண்டும் திருத்தப்பட்ட பேப்பர்.. அமுதாவின் ரிசல்ட் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News