ஆகஸ்ட் 20 'மெர்சல்' இசை வெளியீடு!

Last Updated : Jul 22, 2017, 04:07 PM IST
ஆகஸ்ட் 20 'மெர்சல்' இசை வெளியீடு! title=

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்துக்கு ‘மெர்சல்’ படத்தின் இசை ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமிபத்தில் வெளியானது. 

தற்போது இப்படத்தின் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'மெர்சல்' பாடல்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அன்றைய தினமே டிரெய்லரும் வெளியாகும் என தெரிகிறது. மேலும் இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

Trending News