பிக்பாஸ் 7 : இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா..? எலிமினேஷன் லிஸ்டில் ‘அந்த’ 2 பேர்!

BB 7 Tamil Eviction: பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் போட்டியில் இருந்து இந்த வாரம் யார் வெளியேற உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Dec 1, 2023, 10:32 PM IST
  • பிக்பாஸ் சீசன் 7 விரைவில் முடிவடைய உள்ளது.
  • இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் நடக்க வாய்ப்புள்ளது.
  • வெளியேறப்போவது யார்?
பிக்பாஸ் 7 : இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா..? எலிமினேஷன் லிஸ்டில் ‘அந்த’ 2 பேர்! title=

தமிழ் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள் ஒன்று, பிக்பாஸ். 2017ஆம் ஆண்டு தமிழ் மொழியில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக்பாஸ் சீசன் 7:

சர்ச்சைகளுக்கும், பரபரப்பான விவாதங்களுக்கும் பெயர் போன நிகழ்ச்சி, பிக்பாஸ். ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்று தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை, பிக்பாஸ் எனும் பெயரில் 2007ஆம் ஆண்டு இந்தியில் ஆரம்பித்தனர். நடிகர் சல்மான்கான், இந்தி பிக்பாஸை தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அளவிற்கு அவ்வளவாக வேறு எங்கும் சர்ச்சைகள் எழவில்லை. 

கடந்த அக்டோபர் மாதம், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது. இதில் கூல் சுரேஷ், பூர்ணிமா, மாயா, பிரதீப் ஆண்டனி, ரவீணா தஹா உள்ளிட்ட பலர் பலமான போட்டியாளர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே பலவித விவாதங்களுடனும் சண்டைகளுடனும் ஆரம்பித்த இந்த போட்டி, இப்போது வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. 

டபுள் எவிக்ஷன்..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்கள் மாற மாற, அதன் விதிமுறைகள் மற்றும் போட்டி முறைகளும் மாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் 7வது சீசனிலும் புதுப்புது மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஒரே வீடாக இருந்த பிக்பாஸ் வீட்டில் ஸ்மால் பாஸ் எனும் இன்னொரு பகுதியை கொண்டு வந்தனர். இதுவரை இல்லாத டபுள் எவிக்ஷன் முறையையும் அறிமுகப்படுத்தினர். அதிகம் வாக்குகள் பெறாத கடைசி இரண்டு பேரை போட்டியில் இருந்து வெளியேற்றுவதுதான் டபுள் எவிக்ஷன். இந்த முறை ரசிகர்களுக்கே பெரிய சர்ப்பரைஸாக இருந்தது. முதல் டபுள் எவிக்ஷனின் போது, யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இரண்டாவது டபுள் எவிக்ஷனில், ஆர்.ஜே.பிராவாே மற்றும் அக்ஷயா அகியோர் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் வெளியேறிய உடனேயே வைல்ட் கார்டு மூலம் இரண்டு பழைய போட்டியாளர்கள் உள் நுழைந்தனர். 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: பிரதீப் ஆண்டனி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த வாரமும் அதே தானா..? 

பிக்பாஸ் போட்டியில், இந்த வாரமும் கடந்த வாரம் போலவே டபுள் எவிக்ஷன் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், இந்த டிசம்பர் மாதம் முடிவதற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சியும் முடிந்து விடும். எஞ்சியிருக்கும் இந்த சில வாரங்களில் பெரும்பாலானோரை வெளியேற்றியே ஆக வேண்டும். ஆனால், தற்போது இந்த இல்லத்தில் பலர் உள்ளனர். அதனால், இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் அல்ல..ட்ரிப்பிள் எவிக்ஷன் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

டேஞ்சர் சோனில் இருவர்..

இந்த சீசனின் பிக்பாஸ் போட்டியில் மக்களின் ஆதரவை பெற்றதை விட, பலர் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். குறிப்பாக மாயா, பூர்ணிமா, ஜோவிகா அகியோர் எப்போது பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறுவர் என பலர் காத்துக்கொண்டுள்ளனர். பிரதீப்பின் ரெட் கார்ட் விஷயம், அர்ச்சனாவை கேங் உடன் சேர்ந்து வம்பிழுத்து அழ வைத்தது என இவர்கள் மீது மக்களுக்கு ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த வாரம், பூர்ணிமா அல்லது ஜோவிகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களுக்குத்தான் தற்போது வாக்குகள் குறைவாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பிக்பாஸ்7 : டபுள் எவிக்ஷனில் வெளியேறிய பிராவோ-அக்‌ஷயா! வாங்கிய சம்பளம் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News