சமூக வலைத்தளத்தில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தலைவர்கள் தங்கள் கருத்து மற்றும் புகைப்படங்கள் பகிர்ந்து வருகின்றனர். அதற்கு சில நெட்டிசன்கள் எதிர்மறை வாரத்தைகளை பேசுவதும், ஆபாச கமெண்ட்டுகள் போடுவதும், சம்பந்தப்பட்டவர்களை குறித்து அநாகரீகமாக புகைப்படங்களை பதிவு செய்வது போன்ற முகசுளிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற பதிவுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொது வாழ்க்கையில் இருப்பதால், எந்தவித பதிலும் அளிப்பதில்லை. அதை கடந்து சென்றுவிடுகின்றனர். ஆனால் எண்ணிக்கையில் அடங்கும் சில பேர் அவர்களை எச்சரிப்பதோடு, அவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள்.
அப்படி தைரியமான ஒரு பெண் தான் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிலச்சியில் கலந்துக்கொண்டு புகழ் பெற்ற நடிகை சுஜா வருணி. அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட தன்னுடைய புகைப்படத்திற்கு ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களுக்கு பதிலடி தந்துள்ளார்.
அவரது புகைப்படத்திற்கு ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களை ஸ்கீரின்ஷாட் எடுத்து, அதில் எல்லா பெண்களும் நல்லவர்கள் இல்லை. எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை என பதிலடி கொடுத்துள்ளார்.
நான் ஒரு நடிகை. சினிமாவிலும், பொது நிகழ்ச்சிகளிலும் எந்த மாதிரியான உடை அணியவேண்டும் என்பது எனது விருப்பம். நாங்கள் உடுத்தும் ஆடை தான் உங்களுக்கு பிரச்னையா? இல்லை. உங்கள் எண்ணங்கள், உங்களது காமவெறி தான் பிரச்னை. இன்டர்நெட் எனும் மிகப்பெரிய உலகில் உங்களை நீங்கள் மறைத்துக்கொள்ளலாம்,ஆனால் ஒரு கண்காணிக்கப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள். பெரும்பாலனோர் இன்டர்நெட்டை பெண்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்யவே உபயோக்க படுத்துகின்றனர் என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பிறந்த இவர், முதன் முதலில் நடத்த படம் பிளஷ் 2. இந்த படம் 2002-ம் ஆண்டு வெளியானது. இவர் இதுவரை 50-க்கு மேற்பட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடத்துள்ளார்.