புதுடெல்லி: சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் சிபிஐ விசாரணையை முடித்துள்ளது. சுஷாந்தின் மரணத்தில் எந்தவிதமான சதியோ அல்லது மோசடியோ நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி, விரைவில் சிபிஐ தனது அறிக்கையை பாட்னாவின் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்.
அக்டோபர் 8ஆம் தேதி மதியம், சுஷாந்தின் மைத்துனர், சுஷாந்தின் சகோதரி நீது, ஃபரிதாபாத் கமிஷனர் ஓ.பி. சிங் ஆகியோரை சிபிஐ விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், சிபிஐ தனது விசாரணையை முடித்துக் கொண்டது.
குற்றப்பத்திரிகை வடிவில் சீல் வைக்கப்பட்ட அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்யலாம் என்றும் வட்டாரங்கள் கூறுகின்றன. சிபிஐயின் விசாரணையில் காணப்பட்ட அனைத்து சூழ்நிலை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், ரியா குற்றவாளியா இல்லையா என்ற முடிவை நீதிமன்றமே எடுக்கலாம்.
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.
சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை என்று சந்தர்ப்பங்கள் தெரிவிக்க, நடிகரின் மரணம் தொடர்பான விசாரணையை மும்பை நகர காவல் துறை தீவிரமாக நடத்தி வந்தது. ஆனால், சுஷாந்தின் தந்தை தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். சுஷாந்தின் தோழியும் பாலிவுட் நடிகையுமான ரியா, தனது மகனின் பணத்தை அபகரித்ததாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் பிகார் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பிறகு மாநில அரசு சுஷாந்த் ராஜ்புத்தின் வழக்கு, சிபிஐக்கு மாற்றப்பட்டது.
தொடர்புடைய செய்தி | Sushant Singh Rajput தற்கொலை வழக்கு, என்ன செய்யப்போகிறது சிபிஐ?
சுஷாந்தின் மரணம் குறித்து சட்டரீதியான மருத்துவ அறிக்கையை பெறுவதற்காக டாக்டர் சுதீர் குப்தா தலைமையில் எய்ம்ஸ் தடயவியல் குழு, ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை, சிபிஐயிடம் ஒப்படைத்துள்ள அறிக்கையில், “பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், அவரது குடும்பத்தின கூறுவது போல விஷம் கொடுத்தது அல்லது கழுத்தை நெறித்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR