ரஜினிகாந்த் 42: காலம் கடந்தும் கொண்டாடப்படும் தலைவன்!!

Last Updated : Aug 18, 2017, 03:36 PM IST
ரஜினிகாந்த் 42: காலம் கடந்தும் கொண்டாடப்படும் தலைவன்!! title=

அபூர்வ ராகங்கள் வெளிவந்து இன்றுடன் 42 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை கொண்டாடும் விதமாக 24ஏம்ஸ்டுடியோஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.

பாலசந்தர் இயக்கத்தில் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில காட்சிகளில் தோன்றினார். ஆனால் அவருக்கு இது முக்கியக் கதாபாத்திரமாக இருந்தது. அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இன்று இந்தியாவின் மிகப்பெரிய நடிகராக வலம் வருவார் என்று, தன்னுடைய காந்தமான நடிப்பாலும், தன்னுடைய ஸ்டைலினாலும் தனக்கென்று தனி பாதை அமைத்துக் கொண்டு, இன்று வரை நடித்துக் கொண்டு, மக்கள் செல்வாக்கு உள்ள ஒரு நடிகராக இருக்கிறார்.

 

 

அபூர்வ ராகங்கள் என்ற ஒரு புள்ளியில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து யாருமே எண்ணிப்பார்க்க இயலாத புகழின் உச்சியில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மிகவும் எளிமையுடன் வாழ்த்து வருகிறார். 

42 ஆண்டுகளாக உலகமெங்கும் தமிழ் மக்களின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இனி இவரை விட இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு தகுதியானவர் கிடைப்பார் என்பது கேள்வி குறியே? காலம் கடந்தும் கொண்டாடுவார்களில் ரஜினிகாந்த்தும் ஒருவர் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.

Trending News