கேஜிஎப் 2 படத்தால் பிரபாஸின் கெரியருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷியாம் மற்றும் சாஹோ ஆகிய திரைப்படங்கள் தெலுங்கு திரையுலகில் கடும் தோல்வியை சந்தித்தது.

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2022, 06:51 PM IST
  • ராதே சியாம் படம் படு தோல்வி அடைந்தது.
  • தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வி கொடுத்த பிரபாஸ்.
  • அடுத்து கேஜிஎப் இயக்குனருடன் இணைய உள்ளார்.
கேஜிஎப் 2 படத்தால் பிரபாஸின் கெரியருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! title=

'கேஜிஎப்' முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் வெளியீடு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டிற்கு முன்னரே வணிக ரீதியாக சிறந்த இடத்தை பிடித்துள்ளது.  குறிப்பாக தெலுங்கு மாநிலங்களில் இந்த திரைப்படம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இப்படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களிடம் நன்கு ரீச் ஆன நிலையில், தற்போது இப்படம் குறித்து பிரபாஸ் ரசிகர்களுக்கு பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.  இந்த படம் வெளியாவதற்கும், பிரபாஸ் ரசிகர்கள் பதற்றம் அடைவதற்கும் என்ன சம்மந்தம் என்று பலருக்கும் குழப்பம் ஏற்படும்.

மேலும் படிக்க | ஓடிடி-யில் யாராலும் தொடமுடியாத புதிய சாதனை படைத்த வலிமை!

இப்படத்தின் உரிமை 60 கோடி ரூபாய் என கூறப்படுகிறது, அப்படி இருக்கையில் நிச்சயம் இந்த படத்தை வெளியிடுவதில் அதிக அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.  'கேஜிஎப்-2' படக்குழுவினருக்கு எந்த அளவிற்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதோ, அதே அளவிற்கு தான் பிரபாஸ் ரசிகர்களுக்கும் அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து பிரபாஸ் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வருத்தத்துடன் கருத்து தெரிவித்து இருக்கிறார்.  அவர் பதிவிட்ட ட்வீட்டில், “பிரபாஸின் ரசிகர்களான எங்களால் இன்னொரு தோல்வியைத் தாங்க முடியாது.  ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ராதே ஷ்யாம்' மற்றும் 'சாஹோ' ஆகிய இரண்டு படங்களும் தெலுங்கு திரையுலகில் கடும் தோல்விகளை சந்தித்துள்ளது.  இந்நிலையில் 'கேஜிஎஃப்-2' படமும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தால், 'சாலார்' படத்தைத் தயாரிக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான ஹோம்பேல் பிலிம்ஸ் ஆனது கேஜிஎஃப்  மூலம் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட 'சலார்' படத்திற்கு அழுதாராம் கொடுப்பார்கள்.

kgf2

மேலும் பிரபாஸ் - பிரசாந்த் நீல் காம்போ நிச்சயம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என்பது அனைவர்க்கும் தெரியும்.  இதனால் படத்தின் தயாரிப்பு குழு 'கேஜிஎப்-2' தோல்வியால் ஏற்படும் நஷ்டத்தை பிரபாஸின் படம் மூலம் நிவர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.  இதனால் பிரபாஸின் 'சலார்' படத்தின் மீது முழு பொறுப்பும் விழுகும்" என்று அவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.  கேஜிஎப் முதல் பாகம் போன்றே இதன் இரண்டாம் பாகமும் பாக்ஸ் ஆபிஸில் மிக பெரியளவில் வெற்றியைப் பெறும் என்று வாங்குபவர்கள் நம்புகிறார்கள். 

தெலுங்கு திரையுலகில் இதுபோன்ற நடுத்தர நடிகரின் படத்தின் உரிமயை இவ்வளவு விலை கொடுத்து வாங்குவது பெரிய விஷயமாகும்.  அதே சமயம் எதிர்பார்த்த அளவிற்கு கேஜிஎப்-2 படம் நல்ல வெற்றியை பெற்று, அதிகளவில் நேர்மறையான விமர்சனங்களை பெறுமாயின் இது நாடு முழுவதும் அதிலும் குறிப்பாக தெலுங்கு பாக்ஸ் ஆபிசில் பிளாக்பஸ்டர் ஹிட்டடிக்கும், இதனால் பிரபாஸின் படத்திற்கும் அழுத்தம் ஏற்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | பற்றி எரியும் Beast VS KGF-2: விஜய் குறித்து என்ன சொன்னார் யஷ்?!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News