Devara Part 1 Review Tamil : தெலுங்கு மாெழியில் உருவாகியிருக்கும் படம், தேவாரா பாகம் 1. டோலிவிட்டின் முன்னணி நடிகராக விளங்கும் ஜூனியர் என்.டி.ஆர் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். பான்-இந்திய அளவில் ரிலீஸாகியிருக்கும் இந்த படம், எப்படியிருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
தேவாரா பாகம் 1:
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக, தேவாரா படத்தின் படப்பிடிப்பு நடந்தது. கொரட்டலா சிவா இயக்கி, எழுதி இருக்கும் இந்த படம், ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கிறது. 80-90களில் நடப்பது போல, இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள், ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். இவர்களுடன் சேர்ந்து சயிஃப் அலி கான் வில்லனாக நடித்திருக்கிறார். தல்லூரி ராமேஷ்வரி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ, நரேன், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான்-இந்திய படமாக இருக்கும் இது, செப்டம்பர் 27ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், படம் எப்படியிருக்கிறது என்பதை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டர் விமர்சனம்:
தேவாரா படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், “இது ஒரு படம் மட்டுமல்ல, ஆக்ஷன், ட்ராமா எல்லாமே அடங்கிய ஒரு பெரும் சம்பவம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
#DevaraReview #Devara isn't just a film; it's an event. It's where action, drama, and emotion collide in a way that feels both epic and intimate.
The first half sets the stage, the second half lights it on fire, and by the end, you're not just watching a movie; you're part of…
— Vignesh (@Vignesh_Ajith) September 27, 2024
படத்தின் முதல் பாதி எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டு, இரண்டாம் பாதி வெளிச்சத்தை கூட்டுவதாக அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார்.
மெண்டல் மாஸ்..
#Devara First Half choosaka naako clarity ochindi, #Acharya director guarantee ga koratala kaadu. Mental mass stuff dimpadu .#DevaraOnSep27th #DevaraReview #JrNTR pic.twitter.com/zLHHsMJHV2
— Harsha Ane Nenu (@rodramana) September 27, 2024
தேவாரா படத்தை பார்த்த ஒரு தெலுங்கு ரசிகர், இப்படம் “மெண்டல் மாஸாக” இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
படத்தின் நெகடிவ்-பாசிடிவ்..
ஒரு ரசிகர் படத்தின் நிறை குறைகளை தனது பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார்.
Positives
Tarak
Intense Drama
Epic Action Choreography
Janhvi
BGM & Songs on fire
Powerful Dialogues
Stunning Cinematography
Solid VFXNegatives:
- Predictable plot
- Rushed climax
- Lacks emotional punch #JrNTR #JanhviKapoor pic.twitter.com/KuKGOFDbeO— The Cine Scout (@TheCineScout) September 27, 2024
மேலும் படிக்க | GOAT Movie review : விஜய்யின் The GOAT படம் மாஸா? தூசா? விமர்சனம் இதோ!!
பாசிடிவாக, ஆக்ஷன் காட்சிகளையும் டைலாக்குகளையும் கூறியிருக்கும் அவர், நெகடிவாக எளிதில் கணிக்கப்படும் கதையை சொல்லியிருக்கிறார்.
முதல் பாதி ஓகே..இரண்டாம் பாதி...
#DevaraRevi
First half
Second half ( except climax )Koratala poor direction
Ntr acting tho lakkoni vachadu ala ala
Inka Anirudh music pedda plus cinema ni idhey kapadindhi
Akkada akkada
Konni visual shots vastay
Avi BaguntayMy rating - 2.5 /5
— Pagadala RC (@RamCharanPagad1) September 27, 2024
தேவாரா படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், முதல் பாதிக்கு தம்ஸ் அப்-ம் இரண்டாம் பாதிக்கு தம்ஸ் டவுன்-ம் கொடுத்திருக்கிறார். கொரட்டலா மிகவும் மோசமாக டைரக்ட் செய்திருப்பதாகவும், அனிருத்தின் இசை படத்திற்கு ப்ளஸ் ஆக அமைந்திருப்பதாகவும் மொத்தம் படத்திற்கு 5ற்கு 2.5 கொடுக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | Meiyazhagan Review : சுமாரா? சூப்பரா? மெய்யழகன் படம் எப்படி? திரை விமர்சனம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ