இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட், ஒலிவியா மோரீஸ், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். வசூல் மழை பொழிந்துவரும் இப்படம் பாக்ஸ் ஆபீசில் முந்தைய பல சாதனைகளையும் தகர்த்தெறிந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடித்திருந்த நடிகை ஆலியா பட், இயக்குநர் ராஜமெளலியை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் திடீரென அன்ஃபாலோ செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது திரையுலகில் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. அன்ஃபாலோ செய்ததுடன் மட்டுமல்லாது ஆர்.ஆர்.ஆர் படம் தொடர்பான தனது முந்தைய சில பதிவுகளையும் ஆலியா பட் நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர்.ஆர்.ஆர் படத்தில் அவர் நடித்திருந்த பல காட்சிகளை ராஜமெளலி நீக்கிவிட்டதாகவும் அந்தக் கோபத்தில்தான் ஆலியா பட் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஆர்.ஆர்.ஆர் உருவான காரணத்தால்தான் இந்திப் பிரபலங்களான நடிகை ஆலியா பட் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோரை படக்குழு இறக்குமதி செய்ததாகக் கூறப்பட்டது.
மேலும் படிக்க | ‘பான் இந்தியா’வுக்குப் பெருமை சேர்த்ததா RRR?
இந்நிலையில் ராம் சரணுக்கு ஜோடியாக இதில் நடித்திருந்த ஆலியா சில காட்சிகளில் மட்டுமே படத்தில் வந்துபோனார் எனவும் ஒலிவியா மோரீஸ் அளவுக்குக் கூட ஆலியா பட்டின் கதாபாத்திரத்துக்கு இப்படத்தில் இடமளிக்கப்படவில்லை என ரசிகர்கள் பலர் விமர்சனம் செய்துவந்தனர். 3 மணி நேரத்துக்கும் அதிகமான காட்சிகளைக் கொண்ட படத்தில் ஆலியா பட்டுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருத்து கூறிவந்தனர். இந்த நிலையில்தான் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொதுவாக இதுபோன்ற அன்ஃபாலோ சம்பவங்களில் ஈடுபடுவோர் கவனக்குறைவாகக் கைதவறி நடந்துவிட்டதாக விளக்கம் அளிப்பதுண்டு. ஆனால் ஆலியா பட் ஆர்.ஆர்.ஆர். படம் தொடர்பான சில பதிவுகளையும் நீக்கியுள்ளதாகக் கூறப்படுவதால் இது தவறுதலாக நடந்திருக்க வாய்ப்பில்லை என சிலர் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.
இதனிடையே ராஜமெளலியை ஆலியாபட் இன்ஸ்டகிராமில் ஃபாலோவே செய்யவில்லை எனவும் ஃபாலோவே செய்யாத ஒருவரை எப்படி அவர் அன்ஃபாலோ செய்யமுடியும் எனவும் சிலர் கேள்வி எழுப்பிவருகின்றனர். பொதுவாகவே தான் நடிக்கும் படங்கள் தொடர்பான பதிவுகளை படத்தின் ரிலீஸுக்கு பிறகு அவர் ‘archives’ பட்டியலுக்கு மாற்றிவிடுவது வழக்கம் எனவும், அதுபோலத்தான் ஆர்.ஆர்.ஆர் விஷயத்திலும் நடந்திருக்கக்கூடும் எனவும் இந்த விவகாரம் குறித்து சிலர் தெரிவித்துவருகின்றனர். ஆளாளுக்கு ஒரு தகவல் சொன்னாலும் சம்பந்தப்பட்ட ஆலியா பட்டே வந்து இதற்கு விளக்கம் அளித்தால்தான் இவ்விவகாரத்தில் என்ன நடந்தது எனும் முழுமையான விபரம் தெரியவரும்.
மேலும் படிக்க | அவரும் இல்ல, இவரும் இல்ல: ‘விஜய்-66’ ஹீரோயின் இவங்கதானாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR