'பொன்னியின் செல்வன் வலதுசாரி படம்' - ராஜராஜ சோழன் சர்ச்சையில் வான்டடாக வண்டியில் ஏறும் மோகன்.ஜி

பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்தும், தற்போது எழுந்துள்ள ராஜராஜ சோழன் சர்ச்சை குறித்து, இயக்குநர் மோகன்.ஜி பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 9, 2022, 02:55 AM IST
  • கல்கியின் நாவலில் வலதுசாரி கருத்துகள்தான் நிறைந்திருக்கும் - மோகன்.ஜி
  • த்ரிஷா - விக்ரம் நடித்த காட்சிகள்தான் சர்ச்சைக்கு காரணம் - மோகன்.ஜி
  • மக்களை குழப்பி, பிரிவினை உண்டாக்க வேண்டாம் - மோகன்.ஜி
'பொன்னியின் செல்வன் வலதுசாரி படம்' - ராஜராஜ சோழன் சர்ச்சையில் வான்டடாக வண்டியில் ஏறும் மோகன்.ஜி title=

'அய்யன்', 'சேது பூமி' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஏஆர்.கேந்திரன் முனியசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஓங்காரம்’. அவரே நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், கதாநாயகியாக நடிகை வர்ஷா விஸ்வநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதர், மதன் துரைசாமி, ஜிந்தா, முருகன், ஏழுமலையான், சிவக்குமார், டெல்டா வீரா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

வரும் நவ.4ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின், ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (அக்.8) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கஞ்சா கருப்பு, தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் மோகன்.ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்த திரைப்படத்தின் நடிகை, ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கும் ரூ. 1 லட்சம் கேட்டதாகவும், அதுமட்மின்றி பல்வேறு நிபந்தனைகளையும் விதித்ததாக கூறப்பட்டது. இதனால், அவரை வேறு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கக் கூடாது என கே.ராஜன் பேசியிருந்தார். மேலும், பொன்னியின் செல்வம் திரைப்படம் குறித்தும் சில காட்டமான கருத்துகளை தெரிவித்தார். 

 

இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி,"சினிமாவில் வலதுசாரி, நடுநிலை, இடதுசாரி என அனைத்து தரப்பு திரைப்படங்களும் வெளியாக வேண்டும். அதுதான் ஆரோக்கியமான ஒன்று. யாரும், இதுபோன்ற கதைகளை எடுக்கக்கூடாது என வற்புறுத்தக் கூடாது" என்றார். 

மேலும் படிக்க | ராஜராஜ சோழன் இந்துவா?... போய் பொழப்ப பாருங்கப்பா - பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் காட்டம்

தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பேசியதாவது,"மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வலதுசாரி சிந்தனைக்கொண்டது. கல்கி எழுதிய நாவல் முழுவதுமே அப்படிதான் இருக்கும். திரைப்படத்தில், த்ரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரமும், விக்ரமின் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரமும் உரையாடும் காட்சி ஒன்றுதான் தற்போது எழுந்துள்ள இந்த சர்ச்சைக்கு அடிப்படை காரணம். 

ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில், கையாலய மலையின் வடிவத்தை போன்றது. ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழனும், கங்கைக்கொண்ட சோழப்புரத்தை தூய்மைப்படுத்த கங்கையில் இருந்து நீர் எடுத்துவந்து ஊர் முழுவதும் தெளித்தார். இந்த சடங்கு தற்போது வரை துக்க வீடுகளில் செய்யப்பட்டுதான் வருகிறது. எனவே,தற்போதைய காலக்கட்டதைதான் பார்க்க வேண்டும். மக்களை குழப்பி, பிரிவினை உண்டாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று பேசினார். 

ராஜராஜ சோழனை இந்து மன்னனாக சிலர் சித்தரிப்பதாக கடந்த வாரம் இயக்குநர் வெற்றிமாறன் கூறிய கருத்துகள் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், அதுகுறித்து மோகன்.ஜி மறைமுகமாக ராஜராஜ சோழன் இந்துதான் என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | ஜவான் செட்டில் ரஜினி... விஜய்யுடன் ஷாருக் சந்திப்பு... நடந்தது என்ன? நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News