“என் அப்பா அப்படிப்பட்டவர் இல்லை” ஏ.ஆர்.ரஹ்மான் மகன் போட்ட பரபரப்பு பதிவு!!

AR Ameen About AR Rahman Saira Banu Divorce : ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன், தனது தந்தை குறித்து வெளியிட்டிருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Nov 22, 2024, 02:37 PM IST
  • தந்தை குறித்து பதிவிட்ட ஏ.ஆர்.அமீன்
  • விவாகரத்துக்கு பின் இன்ஸ்டா பதிவு..
  • என்ன கூறியிருக்கிறார்?
“என் அப்பா அப்படிப்பட்டவர் இல்லை” ஏ.ஆர்.ரஹ்மான் மகன் போட்ட பரபரப்பு பதிவு!! title=

AR Ameen About AR Rahman Saira Banu Divorce : உலக இசைத்துறையில் முக்கியமானவராக விளங்கி வருகிறார், ஏ.ஆர்.ரஹ்மான். பல்வேறு உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆன இவர் குறித்த செய்திதான், கடந்த 2 நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் 1995ஆம் ஆண்டு, சாய்ரா பானு என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. குஜராத்தை சேர்ந்த சாய்ராவிற்கும், தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நடந்தது, பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என கூறப்படுகிறது. இவர்களின் திருமண வாழ்க்கை 29 வருடங்களை கடந்த நிலையில், தாங்க் பிரிய முடிவு செய்ததாக இருவரும் அறிவித்தனர்.

சாய்ரா பானு, தனது வக்கீல் மூலமாக பத்திரிகைளகுக்கு செய்தியை வெளியிட, ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தாங்கள் விவாகரத்து பெற இருப்பதை உறுதிப்படுத்தினார். இதையடுத்து, இந்த விவாகரத்திற்கு காரணம் என்ன? இதற்கு மூன்றாம் நபருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமா? என சமூக வலைதளங்கள் முழுவதும் பேச்சு எழுந்தது. 

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கலைஞர் விவாகரத்து:

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கலைஞர்களின் குழுவில் ஒருவர், மோகினி டே. ரஹ்மான், தனது விவாகரத்து குறித்து அறிவித்ததற்கு அடுத்த நாளே, மோகினியும் தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். இருவரும் அடுத்தடுத்து இது போன்ற பதிவுகளை வெளியிட, ரசிகர்கள் இவர்களுக்குள் தொடர்பு இருக்குமோ என்ற பாணியில் பேசி வந்தனர். ஆனால், ரஹ்மான்-சாய்ராவின் வழக்கறிஞர் அப்படி எதுவும் இல்லை என்று பிரச்சனையை முடித்து வைத்தார். இருந்தும் ஊர் வாயை மூட முடியவில்லை.

மேலும் படிக்க | நீங்கள் பார்த்திராத.. ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு அழகான திருமண புகைப்படங்கள்!

அப்பாவுக்கு ஆதரவாக மகன் போட்ட பதிவு!

ஏ.அர்.ரஹ்மானின் மகன் அமீன், சில படங்களில் பாடகராவும் இசைக்கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். விவாகரத்து அறிவிப்பு வெளியான சமயத்தில் “எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு (Privacy) மதிப்பளிக்க வேண்டும்” என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தன் தந்தைக்கு ஆதரவாக தற்போது ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by “A.R.Ameen” (@arrameen)

அதில், ஒரு குழந்தையின் போட்டோவையும் ரஹ்மானின் போட்டோவையும் ஒப்பட்டு “இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டு, கேப்ஷனில் விளாவரியாக தன் தந்தை குறித்து பேசியவர்களுக்கு பதிலளித்திருக்கிறார். 

“என் அப்பா ஒரு லெஜண்ட். இத்தனை வருடங்களில் அவர் இசைக்கு அளித்த பங்களிப்பிற்காக மட்டுமல்ல, அன்பு, மரியாதை, தகுதி அடிப்படையிலும் அவ்வாறு அழைக்கப்படுகிறார். கண்மூடித்தனமான பொய்களையும் வதந்திகளையும் பார்க்கும் போது மனமே நொறுங்கி போகிறது. ஒருவரின் வாழ்க்கை குறித்து பேசும் போது உண்மை மற்றும் மரியாதை குறித்தும் நாம் கவனம் கொள்ள வேண்டும். பொய் தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். நம் அனைவரிடமும் அவர் ஏற்படுத்திய நம்பமுடியாத தாக்கத்தையும் போற்றிப் பாதுகாப்போம்” என்று அமீன் தனது பதிவில் கூறியிருக்கிறார். 

ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு தம்பதியனருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். மூத்த மகள் இசையமைப்பாளராக மாற, இளைய மகள் செஃப் ஆக இருக்கிறார். கடைசி குட்டிப்பையன் ஏ.ஆர்.அமீனும் இசையுலகிற்குள் காலடி எடுத்து வைத்து சில ஆண்டுகள் ஆகிறது. 

மேலும் படிக்க | ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு திருமணம் நடந்தது எப்படி...? முதல் சந்திப்பு எப்படி நடந்தது தெரியுமா...?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News