விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்; பா.ரஞ்சித் தெரிவித்துள்ள முக்கிய தகவல்..!!

கபாலி, காலா என ரஜினியை வைத்து இயக்கிய வெற்றிப் படங்கள் உட்பட பல வெற்றிப் படங்களை தந்துள்ள பா.ரஞ்சித்,  விஅயய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 7, 2021, 10:08 AM IST
விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்; பா.ரஞ்சித்  தெரிவித்துள்ள முக்கிய தகவல்..!! title=

கபாலி, காலா என ரஜினியை வைத்து இயக்கிய வெற்றிப் படங்கள் உட்பட பல வெற்றிப் படங்களை தந்துள்ள பா.ரஞ்சித்,  விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார்.

சமீபத்தில், அவர் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் விஜய்யை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படம் ஒன்றை இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார். சூப்பர் ஹீரோ என்றால் கற்பனையான விசயங்களை எடுத்துக் கூறுபவர் இல்லை. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் உள்ள  தொடர்பின் அடிப்படையில் வைத்து ஒரு கதை தயாரித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ : தடம் படப்புகழ் தான்யா ஹோப்பின் சேவை குணம்!

இயக்குநர் பா.ரஞ்சித் தனது வெற்றிப்படமான அட்டகத்தி பட பாணியில் நட்சத்திரம் நகர்கிறது என்ற காதல் படத்தை இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.  இதில் காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள். முன்னதாக, இயக்குநர் பா.ரஞ்சித்  விக்ரமை பா.ரஞ்சித் ஒரு படம் இயக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகிய நிலையில், இப்போது நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்கப்போவது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தக்வால் அளித்துள்ளார். 

நடிகர் விக்ரம், ‘கோப்ரா’, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘மகான்’, மணிரத்னம் இயக்கத்தில் தயாராகும் ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துவரும் விக்ரம் அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கு முன்பாக, விஜய் எனது இயக்கத்தில் நடிப்பதாக இருந்தால் அவரை சூப்பர் ஹீரோவாகத்தான் நடிக்க வைப்பேன். அதற்கு விஜய் ரொம்ப பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் மிஷ்கினும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ பூஜையுடன் தொடங்கிய கார்த்தி - முத்தையா இணையும் “விருமன்”

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News